Automobile Tamilan

ரூ.2.74 லட்சத்தில் அல்ட்ராவைலட் X47 கிராஸ்ஓவர் விற்பனைக்கு அறிமுகமானது

Ultraviolette X47 Crossover black

அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் புதிய முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள எலக்ட்ரிக் X47 கிராஸ்ஓவர் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிளை ரூ.2.74 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைக்கு முன்பதிவு துவங்கியுள்ளதால் முதலில் முன்பதிவு செய்யும் 1000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.2.49 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது.  முன்பதிவுக்கான கட்டணம் ரூ.999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, டெலிவரி அக்டோபர் 2025 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

Ultraviolette X47 Crossover

X47 Crossover ரக மாடலை பொறுத்தவரை டிசைன் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளதை இந்நிறுவனம் ஸ்டீரிட் நேக்டூ பைக் மற்றும் அட்வென்ச்சர் என இரண்டின் கலப்பில் கிராஸ்ஓவர் ரக மாடலை போல உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த பைக்கின் பவர் 40bhp மற்றும் 610Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் ஆரம்பநிலை 7.1 Kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் முழுமையான சார்ஜில் 211 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என IDC சான்றிதழ் பெற்றுள்ள நிலையில், கூடுதலான பேட்டரி திறன் பெற்ற டாப் வேரியண்ட் 10.3Kwh பேட்டரியை பெற்று 323 கிமீ ரேஞ்ச் என IDC சான்றிதழ் வெளிப்படுத்துகின்றது.

X47 கிராஸ்ஓவரின் செயல்திறன் மிக சிறப்பானதாக உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் மணிக்கு 0-60 கிமீ மற்றும் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை முறையே 2.7 வினாடிகள் மற்றும் 8.1 வினாடிகளில் எட்டிவிடும் என குறிப்பிடப்பட்டு, அதே நேரத்தில் அதிகபட்ச வேகம் மணிக்கு 145 கிமீ ஆகும்.

மற்ற வசதிகளை பொறுத்தவரை மிகவும் கவனிக்கதக்க ஒன்று UV ஹைப்பர்சென்ஸ் ரேடார் தொழில்நுட்பத்தின் மூலமாக பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல், லேன் சேஞ்ச் அசிஸ்ட், ஓவர்டேக் அலர்ட் மற்றும் ரியர் மோதல் எச்சரிக்கை போன்ற அம்சங்களை பெற்றிருப்பதுடன், ஆப்ஷனலாக டேஷ்-கேம் வழங்கப்பட்டுள்ளதால் மோட்டார்சைக்கிளின் முன் மற்றும் பின்புறத்தில் உள்ள காட்சிகளை கேமரா மூலம் பெறமுடியும்.

இந்த எக்ஸ் 47 கிராஸ்ஓவரில் மூன்று நிலை டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஒன்பது ஸ்டேஜ் பெற்ற பிரேக் ரீஜெனரேட்டிவ், சுவிட்சபிள் டூயல் சேனல் ABS மற்றும் TFT கிளஸ்ட்டர் பெற்றுள்ளது.

லேசர் சிவப்பு, ஏர்ஸ்ட்ரைக் வெள்ளை, ஷேடோ கருப்பு என மூன்று நிறங்களை பெற்றுள்ள நிலையில், கூடுதலாக டெஸர்ட் விங் என்ற நிறத்தில் பல்வேறு ஆப்ஷனல் ஆக்செரீஸ் பெற்றதாக உள்ளது.

Exit mobile version