புதிய 2019 சுஸுகி ஜிக்ஸர் 155 பைக் படம் வெளியானது

suzuki gixxer 155 spotted

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், மேம்படுத்தப்பட்ட 2019 சுஸுகி ஜிக்ஸர் 155 பைக்கின் படம் வெளியாகியுள்ளது. முன்பாக ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 பைக்குகள் சந்தையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

இரு வண்ண கலவையில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட ஜிக்ஸர் 155 பைக்கில் என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை. முன்பாக இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ஜிக்ஸர் SF 150 மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக்குகள் முறையே ரூ.1.10 லட்சம் மற்றும் 1.70 லட்சம் விலையில் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கின்றது.

புதிதாக வெளிவந்துள்ள படத்தின் மூலம் மிகவும் ஸ்டைலைங் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான இரட்டை கலவையில் அமைந்துள்ளது. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

14.1 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் FI பெற்று சிறப்பான மைலேஜ் தரவல்லதாக விளங்கும். இதன் டார்க் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

அடுத்ததாக, 250சிசி என்ஜின் பெற்ற ஜிக்ஸர் 250 மாடலில் SOCS (Suzuki Oil Cooling System) நுட்பம் பெற்ற 249சிசி SOHC , நான்கு வால்வுகளை பெற்ற FI ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. அதிகபட்சமாக 26.5 HP பவரும் மற்றும் 22.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆக இருக்கும்.

அடுத்த சில வாரங்களுக்குள் 250சிசி மற்றும் 155சிசி என இரு பைக்குகளும் ஜிக்ஸர் நேக்டு வெர்ஷன் மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

source – indianautosblog

Exit mobile version