Automobile Tamilan

கலர்ஃபுல்லான நிறங்களுடன் கொரில்லா 450-யின் புதிய படம் கசிந்தது

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஜூலை 17 ஆம் தேதி  வெளியிட உள்ள கொரில்லா 450 பைக்கின் சில படங்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் வெளியாகியுள்ள புதிய டூயல் டோன் நிறத்தில் வித்தியாசமான பாடி கிராபிக்ஸ் பெற்ற செம்ம ஸ்டைலிஷாக அமைந்துள்ளது.

ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ரோட்ஸ்டெர் ரக மாடலில் செர்பா 452 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40 hp பவர் மற்றும் 40 Nm  டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.

guerrilla 450 3 colours

இரு பக்க டயரிலும் 17 அங்குல அலாய் வீல் கொண்டு மீட்டியோர் 650 பைக்கில் உள்ளதைபோன்ற கிளஸ்ட்டர் மற்றும் ஹிமாலயனில் உள்ள TFT கிளஸ்ட்டர் என இரு விதமாக பெற உள்ள நிலையில் பல்வேறு மாறுபட்ட வண்ண நிறங்களை பெற உள்ளதாக புதிய படங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. தற்பொழுது வெளியான படங்களில் இருந்து மூன்று நிறங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் குறைந்த விலை மாடல்கள் ஒற்றை வண்ணத்தை கொண்டிருப்பதுடன், டாப் வேரியண்டுகளில் டூயல் டோன் மற்றும் GUERRILLA 450 லோகோ பெரிதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆனது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 விலை ரூ.2.30 லட்சத்தில் துவங்கலாம்.

image source – bulletguru/youtube

Exit mobile version