Automobile Tamilan

டிவிஎஸ் இ-என்டார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எதிர்பார்ப்புகள் என்ன ?

upcoming tvs entorq soon

ஆகஸ்ட் 23 ஆம் தேதி டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட உள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெயர் அனேகமாக ENtorq அல்லது iNtorq என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட க்ரீயோன் எலக்ட்ரிக் கான்செப்ட்டின் அடிப்படையில் அமைந்திருக்கலாம்.

ஏற்கனவே, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஐக்யூப் அமோக ஆதரவினை பெற்றதாக உள்ள நிலையில் இரண்டாவது மாடல் ஸ்போர்ட்டிவ் தன்மையுடன் அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றிருக்கலாம்.

TVS Entorq or Xonic

வரவிருக்கும் புதிய மாடல் 4 Kwh பேட்டரி பெற்று அதிகபட்சமாக 105 KMPH வேகத்தை கொண்டதாகவும், முழுமையான சிங்கிள் சார்ஜில் 150 கிமீ வரை ரேஞ்சு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி, தொடர்ந்து வெளியிட்டு வரும் டீசர் மூலம் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

க்ரீயோன் கான்செப்ட் போல செங்குத்தான எல்இடி ஹெட்லைட் பெற்று, TFT தொடுதிரை வழங்கப்பட்டு ஒரு திரையில் ஸ்பீடோமீட்டர் மணிக்கு 105 கிமீ என காட்டுகின்றது. மேலும் மற்றொரு டீசரில் ஸ்மார்வாட்ச் மூலம் கண்ட்ரோல் செய்வதற்கான வசதிகளை கொண்டிருக்கின்றது.

ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளேவில் அண்டர் சீட் பூட்டைப் பூட்டுவது/திறப்பது, ஹேண்டில் பாரை பூட்டுவது/திறப்பது மற்றும் திருட்டினை தடுக்கும் அம்சம் ஆகியவற்றை பெற்றுள்ளது. டிவிஎஸ் இந்த மாடலின் பெயர் தொடர்பான விபரம் மற்றும் அனைத்து நுட்பவிபரங்களை ஆகஸ்ட் 23 ஆம் தேதி துபாயில் வெளியிட உள்ளது.

Exit mobile version