Automobile Tamilan

வெஸ்பா நோட் 125 பிஎஸ்-6 விற்பனைக்கு வெளியானது

8df6f vespa notte 125

வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனத்தின் மிகவும் மலிவான விலை கொண்ட ரெட்ரோ ஸ்டைல் பெற்ற வெஸ்பா நோட் 125 மாடல் பிஎஸ்-6 இன்ஜின் பெற்றதாக ரூ.94,865 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-4 மாடலை விட ரூ.17,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வெஸ்பா நோட் 125

தோற்ற அமைப்பு, வசதிகள், உட்பட நிறங்களிலும் எந்த மாற்றங்களும் இல்லை. பிஎஸ்-6 இன்ஜினுக்கு மேம்படுத்துவதற்கு Fi மட்டும் புதிதாக பெற்றுள்ளது. இந்த மாடலில் உள்ள 125சிசி என்ஜின் 7500 RPM-ல் 9.92 ஹெச்பி பவர் மற்றும் 5500 RPM-ல் 9.6 Nm ஆக வெளிப்படுத்துகின்றது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட சற்று குறைவான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துகின்றது.

பிரேக்கிங் அமைப்பில் சிபிஎஸ் வசதியுடன் முன்புறத்தில் 149 மிமீ டிரம் மற்றும் பின்புறத்தில் 140 மிமீ டிரம் பிரேக் கொண்டுள்ளது. முன்புறத்தில் சிங்கிள் சைட் ஷாக் அப்சார்பர், பின்புறத்தில் ஏன்டி டைவ் டூயல் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. வெஸ்பா நோட் 125 மாடலில் மேட் பிளாக் நிறம் மட்டும் கொண்டுள்ளது. தற்போது புக்கிங் பேடிஎம் வாயிலாக துவங்கியுள்ளது.

(விலை எக்ஸ்ஷோரூம் கோவை)

Exit mobile version