
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வீடா பிராண்டின் V1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.21,000 வரை சிறப்பு சலுகை பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்குகின்றது.
இதுதவிர, விடா பேட்டரி ஸ்கூட்டரை ஃபிளிப்கார்ட் மூலம் வாங்கும் பொழுது அதிகபட்சமாக ரூ.34,000 வரை சலுகையை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 14 வரை செயல்படுத்துகின்றது.
Vida V1 Pro
V1 Pro ஒரு பெரிய 3.94kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 6kW பவரை உருவாக்குகிறது. V1 மின் ஸ்கூட்டர் 80kph அதிகபட்ச வேகத்தில் பயணிக்கலாம். வி1 ப்ரோ 3.2 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தில் செல்கிறது.
1.2 கிமீ பயணிக்க ஒரு நிமிடத்திற்கு வேகமாக சார்ஜ் செய்ய முடியும். வீட்டு சார்ஜரில், வி1 பிளஸ் 0-80 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய 5 மணிநேரம் 15 நிமிடம் எடுக்கும், அதே சமயம் வி1 ப்ரோ 5 மணிநேரம் 55 நிமிடம் ஆகும்.
நிகழ்நேரத்தில் அதிகபட்சமாக 110 கிமீ வரை ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ், குறைந்த கட்டண இஎம்ஐ போன்றவற்றுடன் நீட்டிக்கப்பட்ட பேட்டரி வாரண்டி பெற 50 % கட்டண சலுகை வழங்கப்படுகின்றது.
மேலும் படிக்க – தமிழ்நாட்டில் பஜாஜ் சேட்டக் ரூ.1.15 லட்சம் மட்டுமே
பல்வேறு நிறுவனங்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.
குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் நடப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு டீலர்களிடம் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட சலுகைகளை நவம்பர் மாதம் மட்டும் கிடைக்கலாம். முழுமையான சலுகைகள் குறித்தான விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.