Bike News

யமஹா எம்டி-15 பைக்கின் “கஸ்டமைஸ் யூவர் வாரியர்” அறிமுகம்

Spread the love

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின எம்டி-15 பைக்கில் பிரத்தியேகமாக “கஸ்டமைஸ் யூவர் வாரியர்” (Customize your warrior) என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பைக்கினை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எம்டி-15 பைக்கில் 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி இன்ஜின் திரவ-குளிரூட்டப்பட்ட, 4 ஸ்ட்ரோக், SOHC, 4 வால்வு பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கின்றது.

MT-15 பைக்கின் நீளம் 2,020மிமீ ,  800மிமீ அகலம் மற்றும் 1,070மிமீ உயரம் கொண்டுள்ளது. இந்த பைக்கின் வீல்பேஸ்  1,335 மிமீ ஆகும். பைக்கின் மொத்த வாகனத்தின் எடை 238 கிலோ ஆகும். கெர்ப எடை 138 கிலோ கிராம் ஆகும்.

தற்போது வந்துள்ள Customize your warrior மூலமாக 11 விதமான வண்ணங்களில் யமஹா எம்டி-15 பைக் கிடைக்க உள்ளது. குறிப்பாக வழக்கமான டார்க் மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், மற்றும் ஐஸ் ஃப்ளோ வண்ணங்களுடன் அலாய் வீல் ஆப்ஷன் விருப்பதிற்கு ஏற்ப வெர்மிலான், ரேசிங் ப்ளூ, கோல்டு, மற்றும் நியான் க்ரீன் வண்ணங்களில் கிடைக்கின்றது. அலாய் வீல் தேர்விற்கு ஏற்ப சிறிய அளவில் பாடி கிராபிக்ஸ் மாற்றம் பெறுகின்றது.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடல்களுக்கு பொருந்தாது. நவம்பர் 20 ஆம் தேதிக்கு பிறகே இந்த கஸ்டமைஸ் ஆப்ஷன் கிடைக்க துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விநியோகம் ஜனவரி 2021 முதல் துவங்குவதுடன், மஞ்சள் நிற வீல் பெற்ற மாடல் மார்ச் 2021 முதல் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் முன்புதிவுக்கு ஏற்ப மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.

சாதாரன யமஹா எம்டி-15 பைக்கை விட விலை ரூ. 4000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

எம்டி-15 விலை ரூ.1,40,600

எம்டி-15 Customize your warrior விலை ரூ.1,44,600

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

we title : Yamaha MT-15 Customize Your Warrior launched


Spread the love
Share
Published by
MR.Durai
Tags: Yamaha MT-15