Automobile Tamilan

ஸ்டையிலான யமஹா MT-15 பைக் விற்பனைக்கு வரவுள்ளது

cdba3 yamaha mt 15

வரும் மார்ச் 15 ஆம் தேதி சக்திவாய்ந்த நேக்டூ ரக ஸ்போர்ட்டிவ் MT-15 (Yamaha MT-15) பைக்கினை இந்திய யமஹா மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட உள்ளது. எம்டி-15 பைக்கின் விலை ரூ.1.27 லட்சத்தில் தொடங்கலாம்.

இந்திய சந்தையில் ஸ்போர்ட்டிவ் ரக டூ வீலர் மாடல் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரிமியம் ரக சந்தையில் பல்வேறு மாடல்களை விற்பனைக்கு பைக் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்தியாவில் யமஹா நிறுவனம் குறைந்த விலை கொண்ட தினசரி பயன்பாட்டிற்கான பிரிவில் ஸ்கூட்டர் மாடல்களுக்கு மட்டும் மிகுந்த கவனம் செலுத்துகின்றது. ஆனால் 150 சிசி உட்பட அதற்கு மேற்பட்ட திறனில் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகின்றது.

அந்த வகையில் விற்பனையில் உள்ள ஆர்15 வெர்ஷன் 3.0  பைக்கில் இடம்பெற்றுள்ள என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், அதன் அடிப்பையிலான நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலை யமஹா MT-15 என்ற பெயரில், சக்திவாய்ந்த 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 155சிசி எஞ்சின் இடம்பெற்ற 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கின்றது.

MT 15 பைக்கின் அளவுகள் தொடர்பான விபரம், நீளம் 2,020மிமீ ,  800மிமீ அகலம் மற்றும் 1,070மிமீ உயரம் கொண்டுள்ளது. இந்த பைக்கின் இரு சக்கரங்களுக்கு இடையிலான வீல்பேஸ்  1,335 மிமீ ஆகும். பைக்கின் மொத்த வாகனத்தின் எடை 238 கிலோ ஆகும். கெர்ப எடை 138 கிலோ கிராம் ஆகும்.

சர்வதேச அளவில் உள்ள எல்.இ.டி ஹெட்லைட், பிரேக் ஆப்ஷனுடன் டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இடம்பிடித்திருக்கலாம். ஆனால் இந்த பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க்கு சஸ்பென்ஷனுக்கு மாற்றாக சாதாரன டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனை பெற்று விலை குறைப்பிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த மாற்றம். பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை இந்த MT-15 பைக் இந்தியாவில் பெற்றிருக்கும்.

மார்ச் மாதம் 15ந் தேதி விற்பனைக்கு வெளிவரக்கூடிய யமஹா MT-15 பைக் ரேட் ரூ.1.27 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அமைந்திருக்கலாம்.

யமஹா MT-15 ஸ்டில்ஸ்
Exit mobile version