Categories: Bike News

இந்தியாவில் யமஹா R15 V3.0 பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ

yamaha yzf r15 v 3 0 launchedடெல்லியில் தொடங்கியுள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், புத்தம் புதிய யமஹா YZF-R15 V3.0 பைக் மாடலை ரூ.1.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

யமஹா R15 V3.0 பைக்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்தோனேசியா உட்பட பல்வேறு சந்தைகளில் வெளியான ஆர்15 பைக்கின் வர்ஷன் 3.0 மாடல் இந்தியாவில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் பெறாத மாடல் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை கொண்ட புதிய ஆர்15 மாடலில் மிக நேர்த்தியான இரட்டை பிரிவு எல்இடி ஹெட்லைட் , எல்இடி டெயில் லைட் மற்றும் சிறப்பான டிசைனிங் செய்யப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் முந்தைய மாடலை விட கூடுலாக பவரை வெளிப்படுத்தும் 19.1 ஹெச்பி வரையிலான பவர், 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவற்றை பெற்றுள்ளது.

மிக நேர்த்தியான டெல்டாபாக்ஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஆர்15 பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், டயரில்  282 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படவில்லை.

137 கிலோ எடை கொண்டுள்ள ஆர்15 பைக்கில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் பொருத்தபகபட்டுள்ள நிலையில் முந்தைய மாடலை விணட மிக சிறப்பான முறையில் கையாளும் வகையிலான அம்சத்தை பெற்றதாக ஆர்15 பைக் விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைக் கருப்பு , சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

முந்தைய மாடலை விட ரூ.6,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ள யமஹா ஆர்15 வர்ஷன்ன் 3.0 பைக் விலை ரூ.1.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.

யமஹா R15 V3 நுட்ப விபரம்

நீளம் – 1990 mm  (R15 V2 – 1970 mm)

அகலம் – 725 mm  (R15 V2 – 670 mm)

உயரம் – 1135 mm  (R15 V2 – 1070 mm)

வீல் பேஸ் – 1325 mm  (R15 V2 – 1345 mm)

எடை – 137 kg  (R15 V2 -136 kg)

எஞ்சின் – Liquid Cooled 4-stroke, SOHC

சிலிண்டர் எண்ணிக்கை – Single cylinder

சிசி – 155.1cc (R15 V2 had 150 cc)

Bore x Stroke – 58 x 58.7 mm

Compression Ratio – 11.6 : 1

பவர் – 14.2 kW (19.93 PS) / 10000 rpm

டார்க் – 14.7 Nm / 8500 rpm

ஸ்டார்டிங் – எலக்ட்ரிக்

எரிபொருள் கலன் – 11 லிட்டர்

ஃப்யூவல் சிஸ்டம் – Fuel Injection

கிளட்ச் டைப் – Wet Type Multi-Plate Clutch

முன் டயர் – 100/80-17M/C 52P

பின் டயர் – 140/70-17M/C 66S

முன்பக்க டிஸ்க் – 282 mm

பின்பக்க டிஸ்க்  – 240 mm

Recent Posts

561 கிமீ ரேஞ்ச்.., கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியானது

இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹…

3 hours ago

புதிய TFT கிளஸ்ட்டருடன் கேடிஎம் 200 டியூக் அறிமுகமானது

390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான…

3 hours ago

ரூ.63.90 லட்சத்தில் கியா கார்னிவல் எம்பிவி அறிமுகமானது

இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில்…

19 hours ago

எம்ஜி வின்ட்சர் EV காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்

எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று…

1 day ago

2024 நிசான் மேக்னைட் காரின் படங்கள் கசிந்தது

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட…

2 days ago

ஓலா S1X 2Kwh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.49,999 மட்டுமே..!

இந்தியாவின் முன்னணி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பிரபலமான ஸ்கூட்டர் வரிசைகளில் ஒன்றான ஆரம்ப நிலை S1X மாடலின் ரேஞ்ச்…

2 days ago