புதிய நிறத்தில் யமஹா YZF-R15 V3.0 பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் பிரசத்தி பெற்ற ஃபேரிங் ரக மாடலாக விளங்கும் YZF-R15 V3.0 பைக்கில் மெட்டாலிக் சிவப்பு நிறத்தை இணைத்துள்ளது. புதிய நிறத்தின் விலை ரூ.1,53,639 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

R15 V3.0 பைக்கில் 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி இன்ஜின் திரவ-குளிரூட்டப்பட்ட, 4 ஸ்ட்ரோக், SOHC, 4 வால்வு பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கின்றது.

மற்றபடி பைக்கின் வசதிகளில் எந்த மாற்றங்களும் இல்லை. கூடுதலான நிறத்தை தவிர பழைய நிறங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

யமஹா ஆர்15 பைக் விலை பட்டியல்

– Racing Blue: ரூ. 1,54,739

– Thunder Grey: ரூ. 1,53,639

– Metallic Red: ரூ. 1,53,639

– Dark Knight: ரூ. 1,55,739

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

Share