ஜனவரி 13.., யெஸ்டி பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

f2eb0 yezdi motorcycles launch date

மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் ஜாவா பிராண்டை தொடர்ந்து அடுத்ததாக வந்துள்ள பிஎஸ்ஏ, இப்பொழுது வர உள்ள யெஸ்டி மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து செயல்பட்டு வருகின்றது.

ஜனவரி 13, 2022 ஆம் தேதி முதல் மாடலாக யெஸ்டி அட்வென்ச்சர் ரோடு கிங் மற்றும் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு உள்ளது

முன்னரே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த அட்வென்ச்சர் ரக மாடல் உற்பத்தி நிலையை எட்டியுள்ளதால் விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் சமூகவலை தள பக்கங்களில் டீசர் வெளியிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு போட்டியாக வரவுள்ள யெஸ்டி அட்வென்ச்சர் மாடலில் ஜாவா பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version