Automobile Tamilan

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

iqube on road price

இந்தியாவின் முன்னணி பேட்டரி மின்சார ஸ்கூட்டர் மாடலான டிவிஎஸ் மோட்டார் ஐக்யூப் ஸ்கூட்டரில் 2.2Kwh, 3.1Kwh, 3.5Kwh, S 3.5Kwh, ST 3.5Kwh, மற்றும் ST 5.3Kwh என மொத்தமாக 6 விதமான வேரியண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

TVS iQube

ஆரம்ப நிலை 2.2Kwh பெற்ற வேரியண்ட் மணிக்கு 75 கிமீ வேகத்துடன் 94கிமீ ரேஞ்சு (IDC) , 3.5Kwh பேட்டரி பெற்ற மூன்று வேரியண்டுகளும் மணிக்கு 78 கிமீ வேகம், ரேஞ்ச் 145 கிமீ (IDC) என உறுதிப்படுத்தப்பட்டு, இறுதியாக டாப் 5.3Kwh வேரியண்ட் 82 கிமீ வேகத்துடன் ரேஞ்ச் 212கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் பெற்றுள்ளது.

(Ex-showroom Tamil Nadu)

2025 TVS iQube on-Road Price in Tamil Nadu

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

பேட்டரி வாரியாக உள்ள வேறுபாடுகளை கீழே உள்ள அட்டவனையில் உள்ளது.

அம்சம் 2.2 kWh 3.1 kWh 3.5 kWh ST 5.3 kWh
IDC Range 94 km 123 km 145 km 212 km
Battery Capacity 2.2 kWh 3.1 kWh 3.5 kWh 5.3 kWh
Top Speed 75 km/h 82 km/h 78 km/h 82 km/h
0‑40 km/h Acceleration 4.2 s 4.2 s 4.2 s 4.5 s
Weight 110 kg 116.8 kg 119 kg 132 kg
Motor Power (peak) 4.4 kW 4.4 kW 4.4 kW 4.4 kW
Torque 140 Nm 140 Nm 140 Nm 140 Nm
Charging (0‑80%) 2h 45 m 4 h 3 m  4 h 40 m 4 h 18 m

மாறுபட்ட பேட்டரி பேக்கினை கொண்டுள்ள ஐக்யூபில் பொதுவாக 7 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரில் பல்வேறு கனெக்ட்டவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக கிடைக்கின்றது.

இரு டயரிலும்  12 அங்குல வீல் பெற்ற எலெக்ட்ரிக் ஐக்யூப் மாடலில் முன்புறத்தில் 90/90-12 மற்றும் பின்புறத்தில் 90/90-12  ட்யூப்லெஸ் டயருடன் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று, டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

டிவிஎஸ் ஐக்யூப் நுட்பவிபரங்கள்

Specs
மோட்டார்
வகை எலக்ட்ரிக்
மோட்டார் வகை Hub மோட்டார்
பேட்டரி 2.2Kwh/3.1kwh/3.5Kwh/5.3Kwh
அதிகபட்ச வேகம் 75km/hr, 78km/hr, 82km/h
அதிகபட்ச பவர் 4.4kw
அதிகபட்ச டார்க் 33Nm
அதிகபட்ச ரேஞ்சு 94 km / 123km / 145km/ 212 km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம்  (0-100%) 6.7மணி நேரம்
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர்போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோஷாக்
பிரேக்
முன்புறம் 220 mm டிஸ்க்
பின்புறம் 130mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 950W
கிளஸ்ட்டர் 7.0 inch tft டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் 1,805 mm
அகலம் 645 mm
உயரம் 1140 mm
வீல்பேஸ் 1301 mm
இருக்கை உயரம் 777 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 157 mm
பூட் கொள்ளளவு 30 லிட்டர்
எடை (Kerb) 110kg – 132 kg

டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் நிறங்கள்

ஐக்யூபில் வேரியண்ட் வாரியாக நிறங்கள் மாறுபட்டாலும், வெள்ளை, பிரவுன், கிரே உட்பட டூயல் டோன் நிறங்கள் என பழுப்பு சேர்க்கப்பட்ட கிரே, ப்ளூ, ஆரஞ்சு, டைட்டானியம் கிரே, மின்ட் ப்ளூ என பலவற்றை பெற்றுள்ளது.

ஐக்யூப் போட்டியாளர்கள்

டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் போட்டியாளர்களாக ஓலா, ஏதெர் ரிஸ்டா, பஜாஜ் சேத்தக், மற்றும் ஹீரோ விடா VX2, ஹோண்டா QC1, ஆக்டிவா e , இ-ஆக்செஸ் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

FAQs TVS iQube Electric scooter

ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்ச் எவ்வளவு ?

TVS iqube image Gallery
Exit mobile version