Automobile Tamilan

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

tvs orbiter electric scooter on road price

டிவிஎஸ் மோட்டாரின் பட்ஜெட் விலை மின்சார பேட்டரி ஆர்பிட்டர் ஸ்கூட்டரில் 3.1Kwh பேட்டரி ஆப்ஷனின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

TVS Orbiter

மாறுபட்ட டிசைன் வடிவமைப்பினை கொண்டுள்ள ஆர்பிட்டரில் ஒற்றை 3.1Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 158 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் பெறப்பட்டுள்ளதால் நிகழ்நேர பயன்பாட்டில் ECO மோடில் 120 கிமீ வரை வெளிப்படுத்தலாம். கூடுதலாக சிட்டி மோட் இடம்பெற்றுள்ளது.

(Ex-showroom Tamil Nadu)

TVS Orbiter on-Road Price in Tamil Nadu

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

அம்சம் 3.1 kWh
IDC Range 158  km
Battery Capacity 3.1 kWh
Top Speed 68 km/h
0‑40 km/h Acceleration 6.8 s
Weight 112 kg
Motor Power (peak) 2.5 kW
Torque
Charging (0‑80%) 4h 10 m

குறைந்த பவர் மற்றும் மணிக்கு அதிகபட்ச வேகம் 68 கிமீ ஆக உள்ள ஆர்பிட்டரில் 845 மிமீ நீளமான தட்டையான இருக்கை முன்பகுதியில் உள்ள ஃபுளோர் போர்டில் அதிகப்படியான இடவசதியுடன் கூடுதலாக 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் போன்றவை கவனிக்கதக்க அம்சங்களாக உள்ளது.

முன்புறத்தில் 14 அங்குல வீல், பின்புறத்தில் 12 அங்குல வீல் பெற்ற எலெக்ட்ரிக்  மாடலில் முன்புறத்தில் 90 / 80 – 14 மற்றும் பின்புறத்தில் 90/90-12  ட்யூப்லெஸ் டயருடன் இருபக்கத்திலும் 130 மிமீ டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று, டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

ஸ்டீல் டியூப் சேஸிஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மாடலில் க்ரூஸ் கட்டுப்பாடு, ஹீல் ஹோல் அசிஸ்ட் உள்ளிட்டவற்றுடன் 5.5 அங்குல கலர் டிஸ்பிளே பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தலாம்.

 டிவிஎஸ் ஆர்பிட்டர் நுட்பவிபரங்கள்

Specs
மோட்டார்
வகை எலக்ட்ரிக்
மோட்டார் வகை BLDC Hub மோட்டார்
பேட்டரி 3.1kwh
அதிகபட்ச வேகம் 68km/hr
அதிகபட்ச பவர் 2.5kw
அதிகபட்ச டார்க்
அதிகபட்ச ரேஞ்சு 158KM (IDC Claimed)
சார்ஜிங் நேரம்  (0-80%) 4.10 மணி நேரம்
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் ஸ்டீல் ட்யூப்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் ட்வீன் ஷாக்
பிரேக்
முன்புறம் 130 mm டிரம்
பின்புறம் 130mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  90/80-14  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 650W
கிளஸ்ட்டர் 5.0 inch lcd டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் 1850 ± 20mm
அகலம் 734 ± 10mm
உயரம் 1294 ± 10mm
வீல்பேஸ் 1301 mm
இருக்கை உயரம் 763 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 169 mm
பூட் கொள்ளளவு 34 லிட்டர்
எடை (Kerb) 112 kg

டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார ஸ்கூட்டரின் நிறங்கள்

ஆர்பிட்டரில் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ட்டியன் காப்பர் என 6 விதமான நிறங்களை கொண்டுள்ளது.

 

ஆர்பிட்டர் போட்டியாளர்கள்

டிவிஎஸ் மோட்டாரின் ஆர்பிட்டர் போட்டியாளர்களாக ஓலா, ஏதெர் ரிஸ்டா, பஜாஜ் சேத்தக், மற்றும் ஹீரோ விடா VX2, ஹோண்டா QC1, ஆக்டிவா e , இ-ஆக்செஸ் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version