• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

by MR.Durai
6 October 2025, 11:22 pm
in TVS
0
ShareTweetSend

tvs-raider-bikeடிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரைடர் 125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2025 TVS Raider

125சிசி சந்தையில் மிக வேகமான வளர்ச்சி பெற்று வரும் மாடலாக விளங்கும் ரைடர் 125 பைக்கில் டிரம் பிரேக், ஒற்றை இருக்கை, ஸ்பிளிட் இருக்கை, SX, iGO மற்றும் சூப்பர் ஸ்குவாட் எடிசன் (SSE), SX என மொத்தமாக 6 வேரியண்டுகள் பெற்று 8 நிறங்களை பெற்றுள்ளது.

ரைடர் பைக்கில் 124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் செயல்திறன் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

கூடுதலாக, ரைடர் iGo மாடல் 10 % வரை கூடுதலாக பவர் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள எஞ்சின் அதிகபட்சமாக டார்க் சாதாரண மாடலை விட 0.55Nm வரை கூடுதலான டார்க் வெளிப்படுத்துகின்றது. எனவே, 6,000RPM-ல் 11.75 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த வேரியண்டில் நார்டோ கிரே நிறத்துடன் அலாய் வீலில் சிவப்பு நிறம் உள்ளது.

ஒற்றை இருக்கை வேரியண்டிலும் எல்இடி ஹெட்லேம்ப் & டெயில் லைட், பெற்று ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூவல் அளவு மற்றும் ரைடு மோடு ஆகியவற்றை வழங்கும் நெகடிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெற்றுள்ளது. ஸ்பிளிட் சிட் பெற்ற வேரியண்ட் விலை கூடுதலாகவும், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குகின்ற ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் வேரியண்ட் SXC ஆக கிடைக்கின்றது.

சூப்பர் ஹீரோக்களின் ஆடைகளின் அடிப்படையில் இரண்டு வண்ணப்பூச்சுகள் உள்ளன. கருப்பு மற்றும் ஊதா நிறத்தில் சில வெள்ளி பூச்சு மற்றும் பின்புறத்தில் ஒரு கருப்பு பாந்தர் லோகோ உள்ளது. அடுத்து, அயர்ன் மேன் மூலம் ஈர்க்கப்பட்ட வண்ணப்பூச்சு வேலை வெள்ளி நிறத்துடன் சிவப்பு மற்றும் கருப்பு பூச்சு பெறுகிறது. டெட்பூல் கருப்பு மற்றும் சிவப்பு அடிப்படையாகவும், வால்வோரின் எடிசன் பெற்றுள்ளது.

டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17-இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/90-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் உள்ளது. முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டிரம் அல்லது டிஸ்க் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் அல்லது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுத்துள்ளது.

குறிப்பாக 125சிசி சந்தையில் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ள ரைடர் 125யில் TFT கிளஸ்ட்டர் அல்லது LCD கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2025 டிவிஎஸ் ரைடர் 125 விலை

  • Raider Drum – ₹ 83,800
  • Raider Single Seat – ₹ 89,300
  • Raider Split Seat – ₹ 91,900
  • Raider iGO – ₹ 91,900
  • Raider SSE – ₹ 93,300
  • Raider SXC DD – ₹ 96,400
  • Raider TFT DD – ₹ 98,300

(EX-showroom TamilNadu)

TVS Raider on-Road Price Tamil Nadu

2025 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Raider Drum – ₹ 1,02,165
  • Raider Single Seat – ₹ 1,08,345
  • Raider Split Seat – ₹ 1,11,234
  • Raider iGO – ₹ 1,11,234
  • Raider SSE – ₹ 1,13,189
  • Raider SXC DD – ₹ 1,16,453
  • Raider TFT DD – ₹ 1,18,786

(All Price On-road Tamil Nadu)

  • Raider Drum – ₹ 94,543
  • Raider Single Seat – ₹ 99,089
  • Raider Split Seat – ₹ 1,04,432
  • Raider iGO – ₹ 1,04,432
  • Raider SSE – ₹ 1,05,675
  • Raider SXC DD – ₹ 1,06,312
  • Raider TFT DD – ₹ 1,08,456

(All Price On-road Puducherry)

ரைடர் 125 வாங்கலாமா ?

டிவிஎஸ் நிறுவனம் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல், எல்இடி ஹெட்லேம்ப் ஸ்பிளிட் இருக்கை, என பலவற்றுடன் மிக சிறப்பான டிஜிட்டல் கிளஸ்ட்டர் நவீனத்துவமான வசதிகளை பெற்றதாகவும் பல்வேறு மாறுபட்ட நிறங்கள் என வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான பல தேர்வுகளை பெற்றிருக்கின்றது.

சராசரியாக மைலேஜ் 52-55 கிமீ வரை லிட்டருக்கு கிடைக்கின்ற நிலையில், போட்டியாளர்களில் சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடல்களும் உள்ளது. அடுத்தப்படியாக, போட்டியாளர்களின் இதன் டாப் வேரியண்டின் விலையில் ஏபிஎஸ் பெற்றிருக்கின்ற எக்ஸ்ட்ரீம் 125ஆர் கிடைப்பதுடன், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்ட கிளாமர் எக்ஸ் உள்ளது.

ஸ்போர்ட்டிவ் ஸ்டைல், ரைடிங் மோடு, டிஜிட்டல் கிளஸ்ட்டர் என பலவற்றை கொண்டு இளைய தலைமுறையினர் தாராளமாக வாங்கலாம்.

2025 டிவிஎஸ் ரைடர் 125 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 53.5 mm x 55.5 mm
Displacement (cc) 124.8 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 11.2 hp (8.37Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 11.2 Nm  at 6000 rpm/ 11.75 Nm  at 6000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 240/ 130 டிரம் mm (ABS)
பின்புறம் 130 mm டிரம்/ 200 mm டிஸ்க்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-17M/C 46P ட்யூப்லெஸ்

90/90-17 Tubeless,49 P (TFT DD and SXC DD)

பின்புற டயர் 100/90-17M/C 55P ட்யூப்லெஸ்

110/80-17 Tubeless ,57 P (TFT DD and SXC DD)

எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2070 mm
அகலம் 785 mm
உயரம் 1028 mm
வீல்பேஸ் 1326 mm
இருக்கை உயரம் 780 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 180 mm
எரிபொருள் கொள்ளளவு 10 litres
எடை (Kerb) 123 kg

டிவிஎஸ் ரைடர் பைக் நிறங்கள்

SXC, TTF DD வேரியண்டில் சிவப்பு நிறத்தில், Split SEAT மாடலில் மஞ்சள், நீலம், சிவப்பு, மற்றும் கருப்பு, இறுதியாக சிவப்பு, கருப்பு நிறங்களில் ஒற்றை இருக்கை மற்றும் சூப்பர் ஸ்குவாட் எடிசன் உள்ளது.

 

2025 TVS Raider rivals

ஹோண்டா SP125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், ஹோண்டா CB 125 Hornet, ஹீரோ கிளாமர் எக்ஸ் 125, பஜாஜ் பல்சர் N125 பஜாஜ் பல்சர் NS125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 பைக்குகளுடன் நேடியாக சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்ற டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் மற்ற போட்டியாளர்களாகவும் ஷைன் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் 125 மாடல்களும் உள்ளன.

Faqs About TVS Raider bike

டிவிஎஸ் ரைடர் 125 பைக் என்ஜின் விபரம் ?

124.8cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் மூன்று வால்வுகளை பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் மைலேஜ் எவ்வளவு ?

ரைடர் 125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 52 கிமீ முதல் 56 கிமீ வரை கிடைக்கின்றது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி ?

TFT கன்சோல் ஆனது SmartXonnect உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிளஸ்ட்டரில் அழைப்புகள், SMS, அறிவிப்புகள், குரல் உதவி மற்றும் பிற புதுப்பிப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. முக்கியமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், பயணிக்கும் திசைகளில் அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை அடைய உதவுகிறது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

டிவிஎஸ் ரைடர் 125 ஆன்-ரோடு விலை ரூ.1.02 லட்சம் முதல் ரூ.1.19 லட்சம் வரை உள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் போட்டியாளர்கள் யார் ?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், ஹோண்டா SP125, ஹீரோ கிளாமர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 பைக்குகளுடன் நேடியாக சந்தை பகிர்ந்து கொள்ளுகின்ற டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் மற்ற போட்டியாளர்களாகவும் ஷைன் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் 125 மாடல்களும் உள்ளன.

TVS Raider image gallery

 

Price updated 06/10/2025

Tags: 125cc BikesTVS Raider
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் XL100 மொபெட்டின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் என்டார்க் 150 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version