Automobile Tamilan

டிவிஎஸ் XL100 மொபெட்டின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

new tvs xl 100 heavy duty alloy wheel

இந்தியாவின் ஒரே மொபெட் என்ற பெருமையுடன் கிடைக்கின்ற டிவிஎஸ் மோட்டாரின் XL100 மாடலின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

TVS XL100

எக்ஸ்எல் 100 இந்தியாவில் மிகவும் பிரபலமாக சுமைகளை எடுத்துச் செல்ல குறிப்பாக தெனிந்தியாவில் அதிகம் விவசாயம் சார்ந்த பயன்பாடுகளுக்கும், சுமைகளை எடுத்துச் செல்வோருக்கும் ஏற்றதாகவும், இலகுவாக கையாளக்கூடிய ஒற்றை ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்று 150 கிலோ எடைக்கு கூடுதலான சுமைகளை எடுத்துச் செல்லவும், மைலேஜ் லிட்டருக்கு 55-60 கிமீ வழங்குகின்றது.

99.7cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 6,000rpm-ல்  4.35PS சக்தியையும், 3,000rpm-ல் 6.5Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஒற்றை வேக கியர்பாக்ஸ் உள்ளது. இதன் மூலம் கியர் மாற்ற சிரமத்தை எதிர்கொள்ளாமல் மணிக்கு அதிகபட்ச வேகத்தை 58கிமீ முதல் 60கிமீ வரை எட்டுகின்றது.

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

TVS XL 100 on-Road Price Tamil Nadu

டிவிஎஸ் மோட்டாரின் எக்ஸ்எல் 100 மொபெட் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

(All Price On-road Tamil Nadu)

(All Price on-road Pondicherry)

ஹெவி டியூட்டி ஆரம்ப நிலை வேரியண்டில் கிக் ஸ்டார்டரை மட்டும் பெற்றுள்ள நிலையில் ஸ்போக்டூ வீல் வழங்கப்பட்டு சுமைகளை ஏற்றிச் செல்ல இரட்டை பிரிவு இருக்கை வழங்கப்பட்டு, இலகுவாக பின்பக்க இருக்கையை நீக்க இயலும்.

ஹெவி டியூட்டி ஐ-டச் ஸ்டார்ட் வேரியண்டில் கூடுதலாக செல்ஃப் மோட்டார் உள்ளதால் கிக் மற்றும் செல்ஃப் என இரண்டையும் பெற்றுள்ளது.

ஹெவி டியூட்டி ஐ-டச் ஸ்டார்ட் வின் வேரியண்டில் அறிமுகம் செய்து 40 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் க்ரோம் பாகங்கள், டூயல் டோன் இருக்கை பிரீமியம் வசதியை பெற்றுள்ளது.

கம்ஃபோர்ட் ஐ-டச் ஸ்டார்ட் மாடலில் ஒற்றை இரு வண்ண கலவை இருக்கை பெற்று ஹெட்லைட்டிற்கு கவுல் பேனல் பெற்று மற்ற மாடலை போல பின் இருக்கை தனியாக இல்லை.

ஹெவி டியூட்டி அலாய் வீல் டாப் மாடலாக வந்துள்ள நிலையில் பஞ்சர் ஆகுவதனை எதிர்கொள்ள டியூப்லெஸ் டயர், அலாய் வீல்,  எல்இடி ஹெட்லைட் என பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது.

பொதுவாக மற்ற வசதிகளில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்டினை பெற்று 15 டிகிரி கோணத்துக்க வண்டி சாய்ந்தால் ஆட்டோ கட் ஆஃப் என்ஜின் உள்ளதால் மொபெட் சாய்ந்தால் என்ஜின் ஆஃப் ஆகி விடும்.

பிரேக்கிங் அமைப்பில் இரண்டு டயரிலும் 110 மிமீ டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன், இந்த மொபெட்டின் மொத்த எடை 89 கிலோ ஆகும்.  முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் உள்ளது.

2025 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 நுட்பவிவரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 51.0 mm X 48.8 mm
Displacement (cc) 99.7 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 3.20 kw(4.4 PS) @ 6000 rpm
அதிகபட்ச டார்க் 6.5Nm @ 3000rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் சிங்கிள்  ஸ்பீடு
கிளட்ச் வெட் டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங்
பிரேக்
முன்புறம் டிரம் 110 mm
பின்புறம் டிரம் 110 mm (with SBT)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்/
முன்புற டயர் 2.5 x 16 41L 6PR ட்யூப்லெஸ்/டீயூப்
பின்புற டயர் 2.5 x 16 41L 6PR ட்யூப்லெஸ்/டீயூப்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-3Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம்
அகலம்
உயரம்
வீல்பேஸ் 1228 mm
இருக்கை உயரம்
கிரவுண்ட் கிளியரண்ஸ்
எரிபொருள் கொள்ளளவு 4 litres
எடை (Kerb) 89 kg

டிவிஎஸ் எக்ஸ்எல் 110 நிறங்கள்

சிவப்பு, நீலம் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் HD அலாய் வீல் மாடலும், வின் எடிசன் பிரவுன் மற்றும் ப்ளூ என இரண்டிலும், ஹெவி டியூட்டி மாடல் கருப்பு, நீலம் மற்றும் பச்சை, கம்ஃபோர்ட் வேரியண்ட் ப்ளூ, லஸ்டர் கோல்டு நிறத்திலும், இறுதியாக ஹெவி டியூட்டி ஐ-டச் மாடல் கருப்பு, நீலம், பச்சை, பர்பிள், மற்றும் சிவப்பு என ஒட்டுமொத்தமாக 13 நிறங்களில் கிடைக்கின்றது.

2025 TVS XL100 rivals

எக்ஸ்எல் 100 மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும், சில குறைந்த விலை ஸ்கூட்டர்களுக்கு சவாலாக உள்ளது.

 Faqs About TVS XL100

டிவிஎஸ் XL100 ஆன்-ரோடு விலை ?

டிவிஎஸ் மோட்டாரின் XL100 மொபெட்டின் ஆன்-ரோடு விலை ரூ. 55,734 முதல் ரூ.76,512 வரை கிடைக்கின்றது.

டிவிஎஸ் XL100 மொபெட் என்ஜின் விபரம் ?

ஒற்றை ஸ்பீடு பெற்ற 99.7cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 6,000rpm-ல் 4.35PS சக்தியையும், 3,000rpm-ல் 6.5Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

டிவிஎஸ் XL100 மைலேஜ் எவ்வளவு ?

டிவிஎஸ் XL100 மைலேஜ் லிட்டருக்கு 50 முதல் 60 கிமீ கிடைக்கும், மைலேஜ் சுமையை பொறுத்து மாறுபடும்.

டிவிஎஸ் XL100 வேரியண்ட் விபரம் ?

Heavy Duty, HeavyDuty i-Touchstart, HeavyDuty i-Touchstart Win Edition, Comfort i-Touchstar, TVS XL100 Heavy Duty Alloy என மொத்தமாக 5 வேரியண்ட் உள்ளது.

TVS XL100 Image Gallery

Exit mobile version