Automobile Tamilan

இந்தியாவின் முதல் மோட்டார் இல்லம்: லக்ஸ்கேம்பர்

9da95 luxecamper premium motorhome

பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் கேம்பர்வேன் கேம்ப்ஸ் அன்ட் ஹாலிடேஸ் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள லக்ஸ்கேம்பர் எனப்படும் மோட்டார் ஹோம் இந்தியாவின் ARAI முதல் அங்கீரிக்கப்பட வர்த்தகரீதியான மோட்டர் இல்லம் ஆகும்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சேஸ் கொண்டு வடிவமைக்கபட்டுள்ள மோட்டர் இல்லத்தின் வீல் பேஸ் 4200 மிமீ கொண்டுள்ளது. AIS-124 விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய இந்நிறுவனத்தின் பள்ளி பேருந்தினை அடிப்படையாக கொண்டதாகும். மிகவும் உயர் தரமான வசதியை கொண்டிருக்கின்ற பிரீமியம் இல்லம் போன்ற இந்த வாகனத்தை ஓட்டுவதற்கு கட்டாயம் கனரக ஓட்டுநர் உரிமம் கட்டாயமாகும்.

லக்ஸ்கேம்பரின் சிறப்பம்சங்களில் இரண்டு குயின் சைஸ் பெட், கிச்சன், எலக்ட்ரிக் இன்டக்‌ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ், டோஸ்டர், எலக்ட்ரிக் கேட்டில், ஃபிரிட்ஜ்/ஃபிரீஸர், உள்ளிட்ட வசதிகளுடன் ஹாட் வாட்டர், சுடுநீர், குளிர்ந்த நீர், ஷவர், டாய்லெட் போன்றவை இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் மேற்கூறையில் சோலார் பேனல்கள், பொழுதுபோக்கு வசதிகள், வை-ஃபை, 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் டிராக்கிங், தீ தடுப்புக் கருவிகள், அவசர வழி மற்றும் ஸ்பீடிங் கவர்னர் போன்றவற்றை கொண்டுள்ளது.

இந்நிறுவனம் கர்நாடகாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுவதற்கான பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக கர்நாடகாவில் மட்டும் கிடைக்கின்ற இந்த சேவை விரைவில் நாடு முழுவதும் விரிவுப்படுத்த உள்ளது.

Exit mobile version