ஃபிரிலேன்டர் 2 எஸ்யூவி கார் அறிமுகம்

லேன்ட் ரோவர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஃபிரிலேன்டர் 2 எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய  லேன்ட் ரோவர் ஃபிரிலேன்டர் 2 காரில் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. மேலும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை.
2013 Freelander 2

ஃபிரிலேன்டர் 2 காரில் வெளி தோற்றத்தில் புதிய முகப்பு விளக்கு மற்றும் பகல் நேரங்களில் எரிக்கூடிய விளக்குகள், புதிய க்ரில், பின்புற விளக்குகளில் மாறுதல் மற்றும் புதிய 17 இன்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 3 புதிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

ஃபிரிலேன்டர் 2 காரில் உட்ப்புறத்தில் டேஸ்போர்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்.  ரோட்டரி டயல் ஆல் டெர்ரின் ரெஸ்பான்ஸ் அமைப்பு முன்பிருந்த ஸ்விட்ச்க்கு பதிலாக கீலெஸ்யாக மாற்றப்பட்டுள்ளது.

2.2 லிட்டர் காமன் டர்போ ரெயில் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே எஞ்சின் 2 வேரியன்டிலும் பயன்படுத்தியுள்ளனர். பேஸ் வேரியன்டில் 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். டாப் வேரியன்டில் 187பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இரண்டு வேரியன்டிலும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ் வேரியன்ட் TD4 SE 38.67 இலட்சம்

டாப் வேரியன்ட் SD4 HSE 43.92 இலட்சம்

(மும்பை எக்ஸ்ஷோரூம் விலை)


Exit mobile version