Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
12 August 2015, 8:26 am
in Car News
0
ShareTweetSendShare

Related Motor News

ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

இந்தியாவில் குறைந்த விலை ஃபோர்டு எலக்ட்ரிக் காரை தயாரிக்கின்றதா.!

இந்தியா வரவிருக்கும் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுக விபரம்

மீண்டும் இந்தியாவில் ஃபோர்டின் காம்பேக்ட் எஸ்யூவி ?

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் செடான் கார் ரூ. 4.89 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஃபிகோ ஆஸ்பயர் கார் சிறப்பான வசதிகளுடன் சவாலான விலையில் வந்துள்ளது.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

ஃபிகோ ஆஸ்பயர் காரில் 6 காற்றுப்பைகள் மற்றும் பல புதிய வசதிகள் காம்பேகட் ரக செடான் பிரிவில் முதன்முறையாக வந்துள்ளது.

தோற்றம்

மிக சிறப்பான டைனமிக் தோற்றத்தில் விளங்கும் ஃபிகோ ஆஸ்பர் காரின் முகப்பு சிறப்பாக உள்ளது. பக்கவாட்டிலும் கவர்ந்திழுக்கின்றது. மொத்தம் 7 வண்ணங்களில் ஆஸ்பயர் கிடைக்கும். அவை சிவப்பு , கருப்பு , நீலம் , சில்வர் , கோல்டு , வெள்ளை மற்றும் கிரே ஆகும்.

உட்புறம்

ஃபோர்டு கார்களின் பாரம்பரியமான உட்புற அமைப்பில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் பல நவீன அம்சங்களை பெற்றிருக்கும். இதன் பூட் வசதி 359 லிட்டர் கொள்ளளவு ஆகும்.

ஃபிகோ ஆஸ்பயர்

என்ஜின்

ஆஸ்பயர் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வகைகளில் கிடைக்கும்.

 அவை 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 87பிஎச்பி ஆகும் இதன் முறுக்கு விசை 112என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வகையிலும் கிடைக்கும். இதன் ஆற்றல் 110பிஎச்பி ஆகும். இதன் முறுக்குவிசை 136என்எம் ஆகும் 6 வேக டிசிடி (dual-clutch transmission -DCT) தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆற்றல் 98.6பிஎச்பி ஆகும். இதன் முறுக்கு விசை 215என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஃபிகோ ஆஸ்பயர் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ மறும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17 கிமீ ஆகும். டீசல் ஆஸ்பயர் மைலேஜ் லிட்டருக்கு 25.83கிமீ ஆகும்.

பாதுகாப்பு வசதிகள்

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் காரின் டாப் வேரியண்டில் மொத்தம் 6 காற்றுப்பைகள் உள்ளன. அனைத்து வேரியண்டிலும் இரண்டு காற்றுப்பைகள் நிரந்தரமாகும். மேலும் ஏபிஎஸ் , இபிடி , ஹீல் அசிஸ்ட் , வாகனத்தை பார்க்கிங் செய்ய உதவும் அலாரம் போன்றவை உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

சிறப்பம்சங்கள்

ஃபோர்டு மைகீ , மை ஃபோர்டு டாக் ,  சிங்க வித் ஆப் லிங் ,  அனைத்து வேரியண்டிலும் இரட்டை காற்றுப்பைகள் , டாப் வேரிண்டில் 6 காற்றுப்பைகள் , ஃபோர்டு  அவசரகால உதவி , போன்றவை குறிப்பிடதக்கதாகும்.

மேலும் படிக்க ; ஃபிகோ ஆஸ்பயர் காரின் சிறப்புகள் முழுவிபரம்

போட்டியாளர்கள்

ஃபிகோ ஆஸ்பயர் போட்டியாளர்கள் ஸ்விஃப்ட் டிசையர் , அமேஸ் , ஜெஸ்ட் , எக்ஸ்சென்ட் போன்ற கார்களுக்கு சவாலை தரவுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் கார் விலை

பெட்ரோல் மாடல் (ex-showroom, Delhi)
1.2P ஆம்பியன்ட் ; ரூ. 4.89 லட்சம்
1.2P டிரென்ட் ; ரூ. 5.77லட்சம்
1.2P டைட்டானியம் ;  ரூ. 6.67லட்சம்
1.2P டைட்டானியம் +  ; ரூ. 7.25லட்சம்
1.5P டைட்டானியம் ஆட்டோ – ரூ. 7.79 லட்சம்
டீசல்  (ex-showroom, Delhi)
1.5D ஆம்பியன்ட் – ரூ. 5.89லட்சம்
1.5D டிரென்ட் – ரூ. 6.77லட்சம்
1.5D டைட்டானியம் – ரூ. 7.67லட்சம்
1.5D டைட்டானியம் + – ரூ. 8.25லட்சம்
Ford Figo Aspire launched in India

Tags: Ford
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

டாடா ஹாரியர்.இவி பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள்.!

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan