Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் விலை பட்டியல்

by MR.Durai
5 June 2016, 1:46 pm
in Auto News, Car News
0
ShareTweetSend

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது. அமியோ கார் விலை ரூ. 5.24 லட்சத்தில் தொடங்குகின்றது. வருகின்ற ஜூலை முதல் அமியோ கார் டெலிவிரி தொடங்கும்.  முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் கிடைக்கும்.

ரூ.720 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள அமியோ காரில் மிக சிறப்பான பல வசதிகளுடன் காம்பேக்ட் ரக செடான் கார்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக வெளிவந்துள்ளது.

காம்பேக்ட் ரக செடான் பிரிவில் விற்பனையில் உள்ள ஃபிகோ ஆஸ்பயர் , மாருதி டிசையர் , டாடா ஸெஸ்ட் , ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வல்ல மாடலாக அமியோ அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு என்ஜின்களை பெற்றிருக்கும். 74 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 112 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் தவிர 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

முதன்முறையாக பல புதிய வசதிகளை காம்பேக்ட் ரக செடான் செக்மென்ட்டில்  தானியங்கி மழை சென்ஸார் , க்ரூஸ் கன்ட்ரோல் , ஆன்டி பிஞ்ச் பவர் வின்டோஸ் , ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறக்கும் கதவுகள் , போன்றவற்றுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஏபிஎஸ் அனைத்து வேரியண்டிலும் , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் அனைத்து வேரியண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் மேம்படுத்தி வருவதனால் காலதாமதமாக விற்பனைக்கு வரவுள்ளது

ஃபோக்ஸ்வேகன் அமியோ பெட்ரோல் மாடல் விலை பட்டியல்

1.2 லிட்டர் டிரென்ட் லைன் –  ரூ. 5.24,300

1.2 லிட்டர் கம்ஃபோர்ட் லைன் – ரூ. 5,99,950

1.2 லிட்டர் ஹைலைன் – ரூ. 7.05 , 900

( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

 

Tags: VolksWagen
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version