ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரின் சிறப்பு எடிசன் அறிமுகம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் கருப்பு சிறப்பு பதிப்பினை பிளாக் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈக்கோஸ்போர்ட் தோற்றத்தில் மட்டும் கருப்பு வண்ணத்தினை அதிகம் பெற்றுள்ளது.

கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்ட இகோஸ்போர்ட் கார் டிரென்ட் + , டைட்டானியம் மற்றும் டைட்டானியம் + என மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கும்.  1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் , 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று வித என்ஜின் ஆப்ஷனில் ஆட்டோமேட்டிக்மற்றும் மெனுவல் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

முன்பக்க கிரில் , பனி விளக்கு பிஸல் , அலாய் வீல் , மேற்கூறை ரெயில்கள் மற்றும் விங் மிரர் கவர் போன்றவற்றில் மட்டுமே கருப்பு நிறத்தினை பெற்றுள்ளது. உட்புறத்தில் எவ்விதமான மாற்றங்களையும் பெறவில்லை.

Ford EcoSport Black Edition Prices

– 1.0-litre EcoBoost Petrol (Trend+) – ரூ. 8.58 லட்சம்
– 1.0-litre EcoBoost Petrol (Titanium+) – ரூ. 9.63 லட்சம்
– 1.5-litre TDCi Diesel (Trend+) – ரூ. 8.88 லட்சம்
– 1.5-litre TDCi Diesel (Titanium) – ரூ. 9.35 லட்சம்
– 1.5-litre TDCi Diesel (Titanium+) – ரூ. 9.93 லட்சம்
– 1.5-litre TiVCT Petrol (Titanium) – ரூ. 8.75 லட்சம்
– 1.5-litre TiVCT Petrol AT (Titanium) – ரூ. 9.80 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

Exit mobile version