கிராண்ட் ஐ10 மேக்னா வேரியண்டில் ஆட்டோமேட்டிக் அறிமுகம்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் மேக்னா பெட்ரோல் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேக்னா ஆட்டோமேட்டிக் வேரியண்ட் தொடக்க விலை ரூ.5.99 லட்சம் ஆகும்.

ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) வேரியண்டில் மட்டுமே கிடைத்து வந்த பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் தற்பொழுது. டாப் வேரியண்ட் ஆஸ்டா (O) மற்றும் மிட் வேரியண்ட் மேக்னாவில் மட்டுமே கிடைக்கும்.ஆஸ்டா வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது.

83 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் இழுவைதிறன் 114 என்எம் ஆகும். இதில் 4 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்சிலும் கிடைக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களில் ஓட்டுநருக்கான காற்றுப்பை நிரந்தர அம்சமாக அனைத்து வேரியண்டிலும் , பயணிகளுக்கான காற்றுப்பை ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா (O) வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். தற்பொழுது ஏபிஎஸ் பிரேக் டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றது.

கிராண்ட் ஐ10 சிறப்பு எடிசன்

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் 20 வருடங்களை கடந்துள்ள நிலையில் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் போன்ற கார்களில் சிறப்பு பதிப்பினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கிராண்ட் i10 மேக்னா ஆட்டோமேட்டிக் விலை விபரம்

1.2 லிட்டர் மேக்னா சாலிட் – ரூ.5.99 லட்சம்

1.2 லிட்டர் மேக்னா மெட்டாலிக் – ரூ. 6.02 லட்சம்

( அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை )

Share