செவர்லே கார்கள் விலை உயர்வு

செவர்லே நிறுவனம் தன்னுடைய கார் மாடல்களின் விலையை 1.5 சதவீதம் வரை அதாவது ரூ.10,000 வரை உயர்த்தியுள்ளது .இந்த விலை உயர்வு வருகிற ஜூன் முதல் வாரம் முதல் அமலுக்கு வரும்.
செவர்லே என்ஜாய்

இந்த விலை உயர்வு குறித்து ஜெஎம் இந்திய பிரிவு துணைத் தலைவர் பி.பாலேந்திரன் கூறுகையில்,

“டீசல் விலை நிரந்தரமற்றதாக மாதந்தோறும் உயர்த்தப்பட்டு வருவதின் காரணமாக போக்குவரத்து செலவுகள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதனை சமாளிக்க முடியவில்லை. எனவே, இதனை வாடிக்கையாளர் மீது தினிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வரும் ஜூன் முதல் கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

செவர்லே கார்களின் விலை ரூ.10.000 வரை உயரும்.

Exit mobile version