சோதனை செய்யப்பட்டது முழுவதும் தானவே இயங்கும் டாடா ஹெக்ஸா கார்கள்

முழுவதும் தானாகவே இயக்கும் டாட்டா ஹெக்ஸா கார்களை, டாட்டா மோட்டார் நிறுவனத்தின் ஐரோப்பியா தொழில்நுட்ப மையம் தயாரித்து வருகிறது. இந்த கார்களை காட்சிக்கு வைத்துள்ளதுடன், காரில் இடம் பெற்றுள்ள டிரைவர் அசிஸ்ட் சிஸ்டத்தின் செயல்பாடுகளில் ஐரோப்பியா நாடுகளின் பொது சாலைகளில் சோதனை செய்துள்ளது.

எதிர்காலத்தில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த தொழில்நுட்ப வசதிகள் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஏற்கனவே சவாலான இந்த திட்டம் பாதுகாப்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. டாட்டா நிறுவன இஞ்சினியர்கள், இந்த கார்களை இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் மாற்ற, இந்தியாவில் இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பாவில் உள்ள டாட்டா மோட்டார் தொழில்நுட்ப மையம், டாட்டா மோட்டார் நிறுவனத்தின் மானியத்தில் பிரிட்டனை மையமாக கொண்ட வார்விக் பல்கலைகழக இன்ஜினியர்களால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மையம் டாட்டா மோட்டார் நிறுவனத்திற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version