டட்சன் ரெடி-கோ 1.0 AMT ரூ.3.80 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களில் விற்பனை செய்யப்படுகின்ற ரெனால்ட் க்விட் ஏஎம்டி, மாருதி ஆல்டோ கே10 ஏஎம்டி போன்ற மாடல்களுக்கு போட்டியாக டட்சன் ரெடி-கோ 1.0 AMT மாடல் ரூ.3.80 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

டட்சன் ரெடி-கோ 1.0 AMT

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரெடி-கோ 0.8 லி மற்றும் 1.0 லி மாடல்களின் தோற்றத்தை பெற்றதாக விற்பனை செய்யப்பட உள்ள ரெடி-கோ மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலுக்கு கடந்த 10ந் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

1.0 லிட்டர் எஞ்சின் i-SAT’ a.k.a. Intelligent Spark Automated Technology என்ற பெயரில் 1.0 லி மாடலில் 3 சிலிண்டர் பெற்ற 999சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 68 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 91 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்ற காரின் மைலேஜ் லிட்டருக்கு  22.5 கிமீ ஆகும். ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ள மாடலின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 23 கிமீ ஆகும்.

ரெடிகோ ஏஎம்டி மாடலில் இடம்பெற்றுள்ள ரஷ் ஹவர் மோட் (Rush Hour Mode) எனும் வசதி நெரிசல் மிகுந்த சாலைகளில் 5 முதல் 6 கிமீ வேகத்தில் ஆக்சிலரேட் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மிக நிதானமாக பயணிக்க வழிவகுக்கின்றது.

பாடி நிறத்திலான பம்பருடன் , பகல் நேர ரன்னிங் விளக்குகள், 13 அங்குல ஸ்டீல் வீல், முழு வீல் கவர் பெற்றிருப்பதுடன், இன்டிரியர் அமைப்பில் சில்வர் நிறத்திலான கைப்பிடிகள், ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்ஸ், கியர்ஷிஃப்ட் இன்டிகேட்டர், புதிய ஆடியோ சிஸ்டத்தில் ப்ளூடூத் ஆதரவை கொண்டதாக வந்துள்ள இந்த மாடலில், ஓட்டுநர் பக்க காற்றுப்பை வழங்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடி-கோ 1.0 AMT காரில் சில்வர், கிரே,ரூபி, லைம் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்க உள்ளது. சாதாரண மாடலை விட ரூ.22,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

டட்சன் ரெடி-கோ 1.0 AMT விலை பட்டியல்

டட்சன் ரெடி-கோ 1.0 ஏஎம்டி T(O) – ரூ.3,80,600

டட்சன் ரெடி-கோ 1.0 ஏஎம்டி S  – ரூ.3,95,505