Automobile Tamilan

டொயோட்டா இன்னோவா விடைபெறுகின்றது

தற்பொழுது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் இந்திய வாடிக்கையாளர்களின் மிகவும் பிடித்தமான மாடல்களில் ஒன்றாகும். புதிய தலைமுறை இன்னோவா க்ரீஸ்டா வரவுள்ளதால் பழைய மாடலுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது

Toyota Innova

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பிடாடி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இறுதி மாடலுக்கு விடைகொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் பிரசத்தி பெற்ற டொயோட்டா குவாலிஸ் மாடலுக்கு மாற்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டடொயோட்டா இன்னோவா கடந்த 11 வருடங்களாக இந்திய எம்பிவி சந்தையில் முடிசூடா மன்னாக தொடர்ந்து விளங்கி வருகின்றது.

மேலும் படிக்க ; டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவ் அறிமுகம்

இரண்டாம் தலைமுறை இன்னோவா அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் சில டீலர்கள் வாயிலாக தற்பொழுது ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்யபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. மேலும் புதிய தலைமுறை இன்னோவா க்ரீஸ்டா மே மாதம் டெலிவரி தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை மலிவான எம்பிவி கார்களான மாருதி எர்டிகா , மொபிலியோ மற்றும் ரெனோ லாட்ஜி போன்ற கார்கள் இருந்தாலும் மாதம் சராசரியாக 5000 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும் தற்பொழுது விற்பனையில் உள்ள டாப் வேரியண்ட் ZX மற்றும்  VX மாடல்கள் எந்த டீலர்கள் வசமும் ஸ்டாக் மாடல்களும் இல்லை என தெரிகின்றது. பேஸ் வேரியண்ட் G , GX வேரியண்ட்களில் 7 மற்றும் 8 இருக்கைகள் ஆப்ஷன் மட்டுமே டாக்சி சந்தையை மையப்படுத்தி ஸ்டாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவாம். எனவே மிக விரைவாக புதிய தலைமுறை இன்னோவா க்ரீஸ்டா விற்பனைக்கு வரும்.

Exit mobile version