நிசான் & டட்சன் கார்கள் விலை குறைந்தது – ஜிஎஸ்டி வரி

நிசான் இந்தியா நிறுவனத்தின் கார்கள் , எஸ்யூவி மற்றும் டட்சன் பிராண்டு கார்களுக்கு அதிகபட்சமாக 3 சதவிகிதம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. டெரானோ எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்சமாக விலை குறைக்ககப்பட்டுள்ளது.

நிசான் கார்கள்

நிசான் நிறுவனம் இந்தியாவில் மைக்ரா, மைக்ரா ஏக்டிவ் , சன்னி மற்றும் டெரானோ எஸ்யூவி போன்ற மாடல்களுடன் ஜிடி-ஆர் சூப்பர் கார் மாடலையும் விற்பனை செய்து வருகின்றது.

தங்களது மாடலில் ஜிஎஸ்டி வரிக்கு பிறகு அதிகபட்சமாக 3 சதவிகிதம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக டெரானோ எஸ்யூவி காரின் விலை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு மாநிலம் மற்றும் டீலர்கள் வாரியாக மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டட்சன் கார்கள்

நிசானின் பட்ஜெட் பிராண்டு மாடலான டட்சன் கார்களின் விலையும் ஜிஎஸ்டி வரவினால் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் டட்சன் பிராண்டில் ரெடி-கோ, கோ கோ ப்ளஸ் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து நிசான் இந்தியா தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்களுக்கும் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கும் சந்தோஷத்தை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version