புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி நாளை அறிமுகம்

ரூ.20 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரையிலான எஸ்யுவி பிரிவில் இந்தியாவின் முதன்மையான மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி கார் விளங்கி வருகின்றது. புதிய தலைமுறை டொயோட்டா ஃஃபார்ச்சூனர் நவம்பர் 7 ,2016 விற்பனைக்கு வரவுள்ளது.

2016-Toyota-Fortuner

அரசியல் தலைவர்கள் , தொழில் அதிபர்கள் என பலரின் விருப்பமான எஸ்யூவி கார் என்றால் ஃபார்ச்சூனர் முதன்மை வகிக்கின்றது. கடுமையான போட்டி நிறைந்த எஸ்யூவி பிரிவில் உள்ள பார்ச்சூனர் கார் முன்னிலை வகிக்கின்றது.

1 . புதிய தலைமுறை ஃபார்ச்சூனர்

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தோற்ற அமைப்பினை பெற்றுள்ள ஃபார்ச்சூனர் காரில் எஸ்யூவி கார்களுக்கே உரித்தான மிக அகலமான கிரில்கள் வி வடிவ தோற்றத்தினை வெளிப்படுத்தும் முன்பக்க தோற்றம் போன்றவை சிறப்பான கம்பீரத்தினை வெளிப்படுத்துகின்றது.

2. தரம் உயர்த்தப்பட்ட கட்டமைப்பு

முந்தைய மாடலின் குறைகளை முற்றிலும் நீக்கி லேடர் ஃபிரேம் அடிச்சட்டத்தினை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ள ஃபார்ச்சூனர் காரில் சஸ்பென்ஷன் அமைப்பு , ஆஃப் ரோடு செயல்திறன் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

3. உட்புறம்

விற்பனையில் உள்ள ஃபார்ச்சூனர் காரின் இன்டிரியர் அமைப்பு பெரிதாக பலரையும் கவர தவறியதனால் தற்பொழுது வரவுள்ள காரின் இன்டிரியர் அமைப்பினை நவீன கால டிசைனுக்கேற்ற பல அம்சங்களை புகுத்தி தொடுதிரை அமைப்பு , க்ரோம் பட்டைகள் , ஸ்டைலான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் என பலவற்றை புதிதாக பெற்று மெருகேறியுள்ளது.

4. தோற்றம்

முந்தைய மாடலை விட மிக ஸ்டைலாக கட்டமைக்கப்பட்டுள்ள ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரின் முகப்பில் அகலமான இரு ஸ்லாட்களுக்கு மத்தியில் லோகோ , வி வடிவ குரோம் பட்டை , ஸ்டைலான 18 இன்ச் அலாய் வீல் , பை-பீம் எல்இடி விளக்குகள் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்கு , பின்புறத்திலும் சிறப்பான ஸ்டைல் என ஒட்டுமொத்த தோற்றத்தில் கம்பீரத்தினை தொடர்கின்றது.

5. புதிய என்ஜின்

முந்தைய 3.0 லிட்டர் என்ஜினுக்கு பதிலாக 2.8 லிட்டர் ஜிடி என்ஜினை பெற்றிருக்கும். இதன் ஆற்றல் 177 hp ஆகும். மேலும் விற்பனையில் உள்ள மாடலில் 2.5 லிட்டர் என்ஜின் மாடலை போல 2.4 லிட்டர் என்ஜின் என இரு என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பிடித்திருக்கும். இது தவிர இன்னோவா காரில் உள்ள 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும் எதிர்பார்பார்க்கப்படுகின்றது.

6. விலை

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ரூ.4 லட்சம் கூடுதலான விலையில் வந்ததை போல ஃபார்ச்சூனர் காரின் விலையும் கூடுதலான விலையில் ரூ. 25 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7. போட்டியாளர்கள்

ஃபோர்டு எண்டெவர் , செவர்லே ட்ரெயில்பிளேசர் , ஹூண்டாய் சான்டா ஃபீ  , சாங்யாங் ரெக்ஸ்டான் , இசுசூ MU-7 மற்றும் பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை சந்தித்து வருகின்றது.

8. வருகை

நவம்பர் 7 ,2016 தேதி புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விற்பனைக்கு வருவதனை டீஸர் வாயிலாக டொயோட்டா உறுதிசெய்துள்ளது.  தற்பொழுது டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி நவம்பர் மத்தியில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version