Site icon Automobile Tamilan

ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைப்பு

இந்தியாவில் மூன்றாவது ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் அம்சத்தை நிரந்தர அம்சமாக சேர்த்துள்ளது.

டொயோட்டா ,ஸ்கோடா நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவில் தனது அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை வோக்ஸ்வேகன் நிரந்தரமாக்கியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இந்த வருட தொடக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு (Anti-Lock Braking System) மற்றும் ஓட்டுநர், உடன் பயணிப்பவருக்கான காற்றுப்பை அம்சத்தை நிரந்தரமாக்கியது. அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படும் ஸ்கோடா தங்களுடைய மாடல்களிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்த்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வென்ட்டோ மற்றும் போலோ கார்களில் விற்பனையில் உள்ள தொடக்கநிலை வேரியன்ட்  டிரென்ட்லைனிலும் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக கம்ஃபர்ட் லைன் வேரியண்டிலிருந்து மட்டுமே ஏபிஎஸ் இடம்பெற்றிருந்தது.

முன்பே நாம் வெளியிட்டிருந்த செய்தியின்படி வருகின்ற 2017 அக்டோபர் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள அனைத்து கார்களிலும் ஏர்பேக் , ரியர் வியூ சென்ஸார் , வேகம் எச்சரிக்கும் கருவி பீப் ஒலியுடன் மற்றும் இருக்கைபட்டை நிரந்தரமாக இருக்கும். மேலும் விற்பனை செய்யப்பட்ட கார்களில் இவற்றை நிரந்தர அம்சமாக அக்டோபர் 2018க்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க ; 2017 அக்டோபர் முதல் கார்களில் கட்டாயம்

Exit mobile version