Home Car News

போர்ஷே 911 டார்கா விற்பனைக்கு அறிமுகம்

போர்ஷே 911 டார்கா 4 கார் இந்தியாவில் ரூ.1.59 கோடி  மற்றும் 4எஸ் 1.78 கோடி விலையிலும் விற்பனைக்கு போர்ஷே இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
போர்ஷே 911 டார்கா கார்

911 டார்கா காரானது செமி கன்வெர்டபிள் காராகும். பி பில்லர் வரை மட்டுமே தனியாக உள்ள கூரை இருக்கும் மற்றும் சி பில்லர் இயல்பாகவே இல்லாமல் இருக்கும். எலக்ட்ரானிக் உதவி மூலம் கூரையை மூடி கொள்ள 19 விநாடிகள் மட்டுமே தேவைப்படும்.

மிகவும் சக்திவாயந்த 911 டார்கா 4 ரக கார்களில் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்க பெறும். அவை 911 டார்கா 4 காரில் 6 சிலிண்டர்களை கொண்ட 3.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 345பிஎச்பி மற்றும் முறுக்கு விசை 390என்எம் ஆகும்.

911 டார்கா 4எஸ் (ஸ்போர்ட்ஸ்) 6 சிலிண்டர்களை கொண்ட 3.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 400பிஎச்பி மற்றும் முறுக்குவிசை 440என்எம் ஆகும். மேலும் 30எச்பி ஆற்றலை அதிகரிக்கும் வகையில் கரீரா பூஸ்ட் கிட் ஆப்ஷனலாக பொருத்தி கொள்ளலாம்.

இரண்டிலும் 7 வேக ஆட்டோமெட்டிக் இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

911 டார்கா 4 காரானது 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்ட வெறும் 4.8 விநாடிகளும் மற்றும் 4எஸ் காரானது 4.4 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

911 டார்கா 4 காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 282கிமீ ஆகும்.

911 டார்கா 4எஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 296கிமீ ஆகும்.

 போர்ஷே 911 டார்கா கார் விலை (ex-showroom delhi)

போர்ஷே 911 டார்கா 4 – ரூ.159 கோடி

போர்ஷே 911 டார்கா 4எஸ் – ரூ. 1.785 கோடி

Exit mobile version