போல்ட் vs ஸ்விஃப்ட் vs கிராண்ட் ஐ10 – ஒப்பீடு

டாடா போல்ட் vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய மூன்று கார்களின் ஒப்பீட்டை பார்ப்போம்.
போல்ட் vs ஸ்விஃப்ட் vs கிராண்ட் ஐ10

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளரச்சிக்கு மிகவும் சிறப்பான அடிதளத்தினை அமைத்துவரும் ஜெஸ்ட் காரை தொடர்ந்து போல்ட் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் முக்கிய விலாசமாக திகழ்வதில் ஸ்விஃப்ட் காருக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஹேட்ச்பேக் பிரிவில் ஸ்விஃப்ட் விற்பனையில் முன்னிலையில் உள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மிக நேர்த்தியான வடிவத்தினை கொண்டு மிக சிறப்பாக விற்பனையில் முன்னோக்கி பயணித்து வருவது குறிப்பிடதக்க அம்சமாகும்.

என்ஜின் ஒப்பீடு

போல்ட், ஸ்விஃப்ட் மற்றும் கிராண்ட் ஐ10 கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜினில் கிடைக்கும்.

பெட்ரோல் என்ஜின்

1. போல்ட் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். மூன்று விதமான ஆப்ஷன்களை கொண்டது அதாவது ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்  வகைகளில் காரை இயக்க முடியும். இதன் ஆற்றல் 90 பிஎஸ் மற்றும் டார்க் 140என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

போல்ட் கார் முழுவிபரம்

2.  ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் விவிடி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் ஆற்றல் 84.3பிஎஸ் மற்றும் டார்க் 115என்எம் ஆகும். 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

3. கிராண்ட் ஐ10 காரில் 1.2 லிட்டர் கப்பா என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 83பிஎஸ் மற்றும் முறுக்குவிசை 114என்எம் ஆகும்.  5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

போல்ட் காரில் பொருத்தப்பட்டுள்ள ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் சிறப்பான மோட் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேலும் மற்ற இரண்டை விட கூடுதலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாக விளங்குகின்றது. மூன்றிலும் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

டீசல் என்ஜின்

1. போல்ட் டீசல் காரில் ஃபியட் 1.3 லிட்டர் குவாட்ராஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 75பிஎஸ் மற்றும் முறுக்கு விசை 190என்எம் ஆகும்.  5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.
2. ஸ்விஃப்ட் காரிலும் போல்டில் பயன்படுத்தப்பட்டுள்ள ஃபியட் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 75பிஎஸ் மற்றும் முறுக்கு விசை 190என்எம் ஆகும்.  5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.
3. கிராண்ட் ஐ10 காரில் 1.1 லிட்டர் சிஆர்டிஆர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 71பிஎஸ் மற்றும் முறுக்குவிசை 160என்எம் ஆகும்.  5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

போல்ட் மற்றும் ஸ்விஃப்ட் டீசல் கார்களில் ஃபியட்டின் ஒரே என்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஆற்றல் மற்றும் செயல்திறன் சமமாகத்தான் உள்ளது. கிராண்ட் ஐ10 காரில் 71பிஎஸ் ஆற்றலை தரவல்ல என்ஜின் பொருத்தியுள்ளனர்

அளவுகள் மற்றும் இடவசதி


போல்ட் காரின் நீளம் 3825மிமீ, அகலம் 1695மிமீ மற்றும் உயரம் 1562மிமீ ஆகும். வீல் பேஸ் 2470மிமீ ஆகும். பூட் ஸ்பேஸ் 210 லிட்டர் கொண்டதாகும்.
போல்ட் உட்ப்புறம்
ஸ்விஃப்ட் காரின் நீளம் 3850மிமீ, அகலம் 1695மிமீ மற்றும் உயரம் 1530மிமீ ஆகும். வீல் பேஸ் 2430மிமீ ஆகும். பூட் ஸ்பேஸ் 205 லிட்டர் கொண்டதாகும்.
கிராண்ட் ஐ10 காரின் நீளம் 3765மிமீ, அகலம் 1660மிமீ மற்றும் உயரம் 1520மிமீ ஆகும். வீல் பேஸ் 2425மிமீ ஆகும். பூட் ஸ்பேஸ் 256 லிட்டர் கொண்டதாகும்.

போல்ட் மற்றும் ஸ்விஃப்ட் கார்களில் பூட் ஸ்பேஸ் சமமாகவே உள்ளது. ஆனால் கிராண்ட் ஐ10 காரில் கூடுதலான பூட் வசதி உள்ளது.
போல்ட் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் அதிகப்படியான வீல்பேஸ் கொண்டுள்ளதால் இடவசதி சிறப்பாக உள்ளது. கிராண்ட் ஐ10 காரிலும் இடவசதி உள்ளது.

மைலேஜ்

போல்ட் காரின் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.57 கிமீ ஆகும்.

ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 20.4கிமீ ஆகும்

கிராண்ட் ஐ10 காரின் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.9கிமீ ஆகும்.
போல்ட் காரின் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 22.53கிமீ ஆகும்.

ஸ்விஃப்ட் காரின் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 25.2கிமீ ஆகும்

கிராண்ட் ஐ10 காரின் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 24கிமீ ஆகும்.


பாதுகாப்பு அம்சங்கள்

இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ், போன்ற முக்கிய அம்சங்கள் போல்ட், ஸ்விஃப்ட் மற்றும் கிராண்ட் ஐ10 கார்களின் டாப் மாடல்களில் மட்டுமே கிடைக்கின்றது.
விலை பட்டியல் 
டாடா போல்ட் காரின் தொடக்க விலை ரூ. 4.44 லட்சம் முதல் 7.06 லட்சம் வரை ஆகும்.
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் தொடக்க விலை ரூ. 4.72 லட்சம் முதல் 7.40 லட்சம் வரை ஆகும்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் தொடக்க விலை ரூ. 4.69 லட்சம் முதல் 6.78 லட்சம் வரை ஆகும்.
எந்த கார் வாங்கலாம் ?

போல்ட் , ஸ்விஃப்ட், கிராண்ட் ஐ10 என மூன்று கார்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்பதனால் உங்கள் விருப்பமான காரை தேர்ந்தேடுங்கள்.

Exit mobile version