Automobile Tamilan

மஹிந்திரா KUV100 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

சிறிய ரக மஹிந்திரா KUV100 எஸ்யூவி ரூ.4.53 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. KUV100 எஸ்யூவி பெட்ரோல் டீசல் என இரு என்ஜின் ஆப்ஷனிலும் 5 மற்றும் 6 இருக்கை அமைப்புகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இளமையான கலர்ஃபுல்லான கேயூவி100 எஸ்யூவி கார் மிக சிறப்பான வசதிகளுடன் இளைய வாடிக்கையார்கள் மற்றும் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திராவின் சரியான எஸ்யூவி மாடலாகும். மஹிந்திராவின் எஸ்யூவி பாரம்பரியத்தில் மிக சிறப்பான தொடக்கநிலை எஸ்யூவி காராக தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்கள் முதல் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள் வரை உள்ள அனைத்து மாடல்களுக்கு போட்டியாக KUV1OO அமைந்துள்ளது.

mahindra-kuv100-black

தோற்றம்

மிரட்டலான ஸ்டைலிஙிங் அம்சங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள கேயூவி 100 காரின் முகப்பில் மஹிந்திராவின் பாரம்பரிய கிரில் சிறியதாக க்ரோம் ஸ்லாட்டில் அமையபெற்றுள்ளது. பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் வந்துள்ள முகப்பு விளக்கின் இணைப்பாக அமைந்து கருப்பு நிற கிளாஸ் எம்ஃபால்கான் முத்திரையுடன் பானெட் முழுதும் அமைந்துள்ளது மற்றும் நேர்த்தியான பனி விளக்குகள் காரின் கம்பீரத்தினை கூட்டுகின்றது. முகப்பு பம்பரில் கொடுக்கப்பட்டுள்ள தேன்கூடு கிரில் இரட்டை வண்ண பாடி கிளாடிங் போன்றவை கவர்கின்றன.

பக்கவாட்டில் நேர்த்தியாக அமைந்துள்ள பக்கவாட்டு புராஃபைல் கோட்கள் பின்புறம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பின்புற கதவு கைப்பிடி வீன்டோஸ் கிளாஸ்க்கு அருகில் அமைந்துள்ளது. மற்றொரு கவர்ந்திழுக்கும் அம்சமான பின்புற பார்க்கும் ஓஆர்விஎம் (ORVM) மிக சிறப்பான கோடுகளை கொண்டுள்ளது.

பின்புறம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள பக்கவாட்டு கோடுகள் மிகவும் ஸ்டைலிசாக டெயில் விளக்குகளுக்கு மேலாக அமைந்துள்ளது. பின்புறத்தில் இரட்டை வண்ண பம்பர் என ஒட்டுமொத்தமாக டிசைனில் மஹிந்திரா KUV100 அசத்தலாக உள்ளது.

உட்புறம்

மஹிந்திரா உட்புற தரத்தில் தன்னுடைய திறனை டியூவி300 காரினை தொடர்ந்து மிக சிறப்பான கட்டுமானத்தை கொண்டுள்ள உட்புறத்தினை கொடுத்துள்ளது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப 5  (2+3) மற்றும் 6 (3+3) இருக்கை ஆப்ஷன் கொடுத்திருப்பது மிக சிறந்த முயற்சியாகும்.

மிக நேர்த்தியான ஸ்டீயரிங் வீல் , ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள் ,கியர் லிவரை டேஸ்போர்டில் வைத்திருக்கின்றது.  4டோர் கதவுகளிலும் ஆம்பியன்ட் லைட்டிங் , முன்பக்கத்தில் கோ டிரைவர் இருக்கை அடியில் ஸ்டோரேஜ் வசதி , ஃபுளோர் ஸ்டோரேஜ் வசதி பின் இருக்கை அடியில் என பல வசதிகளை கொடுத்துள்ளது. பூட் ஸ்பேஸ் வசதி 243 லிட்டர் கொள்ளளவு உள்ளது. பின்புற இருக்கையை மடக்கினால் 473 லிட்டர் வரை விரிவடையும்.

 

இன்ஜின்

மகிந்திரா நிறுவனத்தின் புதிய எம் ஃபால்கான் சீரிஸ் என்ஜின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள கேயூவி 100 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது. மஹிந்திராவின் முதல் பெட்ரோல் முயற்சி பல பெட்ரோல் ஆர்வலர்களுக்கு வரவாக அமைந்துள்ளது.

82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டீசல் எஸ்யூவி காராக மஹிந்திரா கேயூவி100 விளங்குகின்றது. டீசல் கேயூவி100 காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.83 கிமீ ஆகும். மேலும்  பெட்ரோல் கேயூவி100 காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.15 கிமீ ஆகும்.

சிறப்பம்சங்கள்

4 கதவுகளிலும் பட்டல் ஆம்பியன்ட் லைட் , ஃபாலோ மீ , லீட் மீ முகப்பு விளக்கு , பூளூடூத் தொடர்பு கால் வசதி ,  புளூ சென்ஸ் ஆப் ,  ரீமோட் கீலெஸ் என்ட்ரி என பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

ஏபிஎஸ் , இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் ஆப்ஷனலாக முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் உள்ளது.  என்ஜின் இம்மொபைல்சர் , ISOFIX சைல்டு இருக்கை பொருத்தும் வசதி பின்புற இருக்கை ,  முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா கேயூவி 100 வேரியண்ட் விளக்கம் மற்றும் பிரவுச்சர் விபரம்

மஹிந்திரா கேயூவி 100 முழுவிலை பட்டியல்

மஹிந்திரா KUV100 பெட்ரோல் விலை விபரம்

KUV100 K2 (6 str) – ரூ. 4,53,932

KUV100 K2+ (6 str) – ரூ. 4,76,323

KUV100 K4  (5 str) – ரூ. 4,89,554

KUV100 K4  (6 str) – ரூ. 4,94,554

KUV100 K4+ (5 str ) – ரூ. 5,11,935

KUV100 K4+ (6 str ) – ரூ. 5,17,034

KUV100 K6  (5 str) – ரூ. 5,49,603

KUV100 K6 (6 str) – ரூ. 5,54,692

KUV100 k6+ (5 str ) – ரூ. 5,71,994

KUV100 K6+ (6 str ) – ரூ. 5,77,083

KUV100 K8 (5 str ) – ரூ. 6,05,581

KUV100 K8 (6 str ) – ரூ. 6,10,670

Mahindra KUV100 Petrol Prices (ex-showroom, Chennai )

 

மஹிந்திரா KUV100  டீசல் விலை விபரம்

KUV100 K2 (6 str) – ரூ. 5,35,354

KUV100 K2+ (6 str) – ரூ. 5,57,745

KUV100 K4  (5 str) – ரூ. 5,70,977

KUV100 K4  (6 str) – ரூ. 5,76,065

KUV100 K4+ (5 str ) – ரூ. 5,93,368

KUV100 K4+ (6 str ) – ரூ. 5,98,457

KUV100 K6  (5 str) – ரூ. 6,36,114

KUV100 K6 (6 str) – ரூ. 6,41,203

KUV100 k6+ (5 str ) – ரூ. 6,58,505

KUV100 K6+ (6 str ) – ரூ. 6,63,594

KUV100 K8 (5 str ) – ரூ. 6,97,181

Mahindra KUV100 Diesel Prices (ex-showroom, Chennai )

6 str –  6 இருக்கை , 5 str – 5 இருக்கை

 

[envira-gallery id="5460"]

Exit mobile version