Automobile Tamil

மஹிந்திரா XUV500 காரில் கூடுதல் வசதி அறிமுகம்

மிகவும் ஸ்டைலிஸான மஹிந்திரா XUV500 எஸ்யூவி காரின் W4 பேஸ் வேரியண்டில் 6 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தினை புதிதாக இணைத்துள்ளது. XUV500 காரின் தொடக்கநிலை வேரியண்ட் வாங்குபவர்களுக்கு நல்லதொரு வசதியாகும்.

mahindra-xuv500

மஹிந்திரா XUV500 காரில் 140 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 330 Nm ஆகும். இதில் 6 வேக மென்வல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

டெல்லியில் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி உள்ள டீசல் என்ஜின் கார்கள் விற்பனை செய்ய தடை உள்ளதால் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்களில் 1.99 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது

பல நவீன வசதிகளான சூரிய மேற்கூறை , கீலெஸ் என்ட்ரி , என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , க்ரூஸ் கன்ட்ரோல் , ரிவர்ஸ் கேமரா என பலவற்றை டாப் வேரியண்டான W10 யில் பெற்றுள்ளது. பேஸ் வேரியண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6 இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட்  சிஸ்டத்தினை மோனோக்ரோம் டச் ஸ்கீரின் யூனிட் என அழைகப்படுகின்றது.

இந்த புதிய சிஸ்டத்தின் வாயிலாக பூளூடூத் , யூஎஸ்பி , ஐ பாட் தொடர்பு , சிடி , ஹேண்டஸ் ஃபீரி காலிங் என பல வசதிகளை பெற்றாலும் விலையில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

விற்பனைக்கு வந்தது முதல் இன்றுவரை தொடர்ந்து சீரான விற்பனையை பதிவு செய்து வரும் மஹிந்திரா XUV500 எஸ்யூவி கார் மாதம் 3500 கார்களை சராசரியாக விற்பனை செய்துவருகின்றது. க்ரெட்டா எஸ்யூவி காருடன் கடுமையான போட்டியை எதிர்கொண்டாலும் மஹிந்திராவின் எஸ்யூவி பாரம்பரிய தன்மை சிறப்பாகவே உள்ளது.

Exit mobile version