மாருதி ஆல்ட்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்

வரவிருக்கும் மேம்படுத்தப்பட்ட மாருதி ஆல்ட்டோ 800 காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 காரில் தோற்ற மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது.
2016-Maruti-Alto-Facelift-spy
முன்புற தோற்ற அமைப்பில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பம்பரின் மேற்பகுதியில் பானெட்க்கு கீழாக சுசூகி லோகோ அமைந்துள்ளது. முகப்பில் விளக்கில் மாற்றம் இல்லை, இன்டிகேட்டரில் கிளியர் லென்ஸ் பெற்றுள்ளது.

பக்கவாட்டிலும் மற்றும்  பின்புறத்திலும் மாற்றங்கள் இல்லை , வீல் கேப் புதுப்பிக்கப்பட்டிருக்கும். உட்புறத்தில் பெரிதான மாற்றங்கள் இருக்காது என தெரிகின்றது.

47.65 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 69Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. போட்டியாளரான க்விட் காருக்கு சாவிலினை தரும் வகையிலே இந்த மாற்றங்களை பெற்றுள்ளது. மேலும் வரவிருக்கு ரெடிகோ மற்றும் இயான் கார்களுக்கு ஈடுகொடுக்க வல்லதாக ஆல்ட்டோ 800 விளங்குகின்றது.

என்ஜின் மற்றும் விலையில் பெரிதான மாற்றங்கள் இருக்காது. அடுத்த சில வாரங்களில் புதிய ஆல்டோ 800 கார் விற்பனைக்கு வரலாம்.

 

படங்கள் உதவி : gaadiwaadi

Exit mobile version