Categories: Auto NewsCar News

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் ஸ்போர்ட்ஸ் எடிசன் ; ஐரோப்பிய கால்பந்து போட்டி

2016 ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் தொடங்கியதை கொண்டாடும் வகையில்  மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் சிறப்பு ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடல்கள் யூரோ தொடர் இறுதி போட்டி வருகின்ற ஜூலை 10 , 2016 நடக்கும் வரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Mercedes-Benz-sports-edition-UEFA-EURO-2016

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் . சிஎல்ஏ , மற்றும் ஜிஎல்ஏ ஆகிய மூன்று மாடல்களில் வெளியிட்டுள்ள சிறப்பு எடிசன் மாடல்களின் தோற்றத்தில் ஏஎம்ஜி ஸ்டைல் முன் மற்றும் பின் பம்பர்களுடன் முன் பம்பர் மற்றும் பக்கவாட்டு ஸ்கிட் பேனல்கள் , ஸ்போர்ட் எடிசன் பேட்ஜ் மற்றும் பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் கார்பன் ஃபைபர் கவர் போன்றவை கொண்டுள்ளது. உட்புறத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்போர்ட்டிவ் பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றபடி மூன்று கார்களிலும் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமலே தொடரும்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜெர்மன் நாட்டின் தேசிய கால்பந்து அணிக்கு முக்கிய ஸ்பான்சராக விளங்குகின்றது. எனவே அதனை கொண்டாடும் வகையிலே ஐரோப்பிய கால்பந்து போட்டிகளை அடிப்படையாக கொண்ட சிறப்பு ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டுள்ளது. இதுதவிர மெர்சிடிஸ் விற்பனையாளர்கள் வழியாக கால்பந்து , கீ செயின் , தொப்பி , பேக் மற்றும் பேண்டுகள் ஜெர்மன் கால்பந்து அணியின் பிராண்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்போர்ட் எடிசன் விலை பட்டியல் 

Mercedes A-class 180: Rs 25.95 லட்சம்

Mercedes A-class 200 d: Rs 26.95 லட்சம்

Mercedes CLA 200: Rs 33.24 லட்சம்

Mercedes CLA 200 d: Rs 34.25 லட்சம்

Mercedes GLA 200: Rs 34.23 லட்சம்

Mercedes GLA 200 d: Rs 35.26 லட்சம்

(அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலை)

 

Recent Posts

பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

இந்தியாவில் ரூ.14.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் டெலிவரி…

13 hours ago

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன்…

19 hours ago

டாடா கர்வ்.இவி ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்கள்

ஆகஸ்ட் 7ஆம் தேதி வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ்.இவி கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் காரில் 40.5Kwh மற்றும் 55Kwh இரண்டு…

22 hours ago

வரவிருக்கும் மாருதி சுசூகியின் 2024 டிசையர் பற்றி சில முக்கிய விபரங்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செடான் ரக 2024 டிசையர் மாடல் ஆகஸ்ட் மாதம் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற…

1 day ago

2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி…

2 days ago

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை பட்டியல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் என்ஜின் விபரம் உண்மையான மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை…

2 days ago