ரெனோ லாட்ஜி வோல்டு சிறப்பு எடிசன் அறிமுகம்

ரெனோ லாட்ஜி எம்பிவி காரில் கூடுதல் வசதிகளை பெற்ற சிறப்பு  பதிப்பாக ரெனோ லாட்ஜி வோல்டு எடிசன் (Renault Lodgy World Edition) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாட்ஜி 85 PS விலை ரூ. 9.74 லட்சம் மற்றும் லாட்ஜி 110 PS விலை ரூ.10.40 லட்சம் ஆகும்.

லாட்ஜி எம்பிவி கார் எர்டிகா , மொபிலியோ , சைலோ மற்றும் இன்னோவா க்ரீஸ்ட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் பெரிதாக விற்பனையை பதிவு செய்யவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக லாட்ஜி 85 PS வேரியண்டின் விலை ரூ.96,000 வரை குறைக்கப்பட்டது. மேலும் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கூடுதலாக 25 வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

நகைபோன்ற தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் ஸ்ட்டூ பதிக்கப்பட்ட முன்பக்க கிரில் , பனி விளக்கு அறை , இருவண்ண கலவையில் பம்பர் , 15 இன்ச் அலாய் வீல் , கருப்பு வீல் ஆர்ச் கிளாடிங் , இரட்டை வண்ண மேற்கூறை ரெயில் , கருப்பு வண்ணத்தில் பி, சி பில்லர்கள் மற்றும் ரியர் ஸ்பாய்லர் போன்ற வசதிகளை பெற்றுள்ளது. பின்புறத்தில் வோல்டு எடிசன் பேட்ஜ் மற்றும் பேரல் வெள்ளை , பியரி சிவப்பு , ராயல் ஆர்சிட் மற்றும் மூன்லைட் சில்வர் என 4 வண்ணங்களில் சிறப்பு எடிசன் கிடைக்கும்.

உட்புறத்தில் ஆடியோ சிஸ்டத்துடன் பூளூடூத் ஆதரவு , 2 ,3 வது வரிசை இருக்கைகளுக்கு ஏசி வென்ட் , சிறப்பு எடிசன் ஃபேபரிக் இருக்கைகள் , க்ரோம் அசென்ட்ஸ் , என பலவற்றை சிறப்பு எடிசனில் கொண்டுள்ளது.

1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் பொருத்தபட்டுள்ளது. அடிப்படை மாடல்களில் 84 bhp ஆற்றலை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

உயர்ரக மாடல்களில்  108.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ரெனோ லாட்ஜி வோல்டு எடிசன் விலை விபரம்

லாட்ஜி 85 PS விலை ரூ. 9.74 லட்சம்

லாட்ஜி 110 PS விலை ரூ.10.40 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை )

Exit mobile version