வால்வோ V40 சொகுசு கார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் வால்வோ V40 சொகுசு ஹேட்ச்பேக் காரை  வால்வோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள வி40 க்ராஸ் கன்ட்ரி காரினை அடிப்படை மாடல்தான் V40 காராகும்.

வி40 க்ராஸ் கன்ட்ரி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள துனை கருவிகளான ஸ்கிட் பிளேட் ,  பாடி கிளாடிங் , ரூஃப் ரெயில் போன்றவை இல்லாமல் வி40 கார் விளங்கும்.

முதற்கட்டமாக வால்வோ V40 கார் 147.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் D3 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக தானியங்கி பரப்புகை பயன்படுத்தியுள்ளனர். பெட்ரோல் மாடல் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.

நகர பாதுகாப்பு அமைப்புடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் , டிராக்‌ஷன் கட்டுப்பாடு , 8 காற்றுப்பைகள் போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை இரண்டு வேரியண்டிலும் கொண்டுள்ளது.

பேஸ் வேரியண்டான வால்வோ V40 கைனெட்டிக் டிஎஃப்டி தொடுதிரை அமைப்பு , நேவிகேஷன் , பூளூடூத் , ஆக்ஸ்-இன் தொடர்பு போன்ற வசதிகள் உள்ளன.

வால்வோ R டிசைன் வேரியண்டில் தோற்ற அமைப்பிலும் சில மாறுதல்களை கொண்டுள்ளது. சன்ரூஃப், மழையை உணர்ந்து இயங்கும் வைப்பர்கள் , கீ லெஸ் டிரைவ் , பார்க்கிஃ உதவி போன்ற அம்சங்கள் கூடுதலாக உள்ளது.

வால்வோ வி40 போட்டியாளர்கள்

தொடக்க நிலை சொகுசு காரான வால்வோ வி40 காருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ X1 கார்கள் சவாலினை தரும்.

வால்வோ V40 கார் விலை (ex-showroom, Delhi)

வால்வோ V40 Kinetic – ரூ 24.75 லட்சம்

வால்வோ V40 R-Design – ரூ 27.7 லட்சம்

Volvo V40 launched in India

Share