Site icon Automobile Tamilan

வில்லங்கமான விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய ஃபோர்டு

ஃபோர்டு இந்தியா ஃபிகோ காரின் மூன்றாவது ஆண்டு கொண்டாடத்திற்க்காக  விளம்பரப்படுத்துவதற்க்கு பதிலாக பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்த விளம்பரத்தால் இந்தியா மட்டும்ல்ல வெளிநாடுகளிலும் சர்ச்சையை கிளம்பியதால் வருத்தம் தெரிவித்து கொண்டுள்ளது.
விளம்பரத்திற்க்கான நோக்கம் பின்புற இடவசதி அதிகம் உள்ளதை சித்தரிப்பதற்க்காக எடுக்கப்பட்ட காட்சிகளில் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோணி, பாரிஸ் ஹில்டன்,கிம் கர்தஷியான் சகோதரிகள், பார்முலா-1 நட்சத்திரங்கள் மைக்கேல் சூமேக்கர், செபாஸ்டியன் வெட்டல், ஃபெர்னான்டோ அலோன்சா மற்றும் லூயிஸ் ஹாமில்டன் என சகட்டுமேனிக்கு இவர்களை வைத்து இந்த விளம்பரத்தில் விளையாடியது வினையாகி விட்டது.
ford figo
படம் 1
இத்தாலி பிரதமர் முன் இருக்கையில் அமர்ந்து இரண்டு கைகளை காட்டுகிறார். பின்புறத்தில் மூன்று பெண்கள் கை, கால் மற்றும் வாய் கட்டப்படுள்ளது.
படம் 2
பாரிஸ் ஹில்டன் முன் இருக்கையில் அமர்ந்து கண் அடிப்பது போலவும், பின்புறத்தில் கிம் கர்தஷியான் சகோதரிகள் கை, கால் மற்றும் வாய் கட்டப்படுள்ளது.
படம் 3
பார்முலா-1 நட்சத்திரம் மைக்கேல் சூமேக்கர் அமர்ந்து இருப்பது போலவும்,பின்புறத்தில் செபாஸ்டியன் வெட்டல், ஃபெர்னான்டோ அலோன்சா மற்றும் லூயிஸ் ஹாமில்டன் போன்றோர் கை, கால் மற்றும் வாய் கட்டப்படுள்ளது.
இந்த விளம்பரத்திற்க்கு இத்தாலி முன்னாள் பிரதமர் மற்றும் அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியா ஃபோர்டு மட்டுமல்லாமல் ஃபோர்டு தலைமையையும் வருத்தம் தெரிவித்துள்ளதாக தெரிகின்றது. இத்தாலியின் முன்னாள் பிரதமரிடம் தனிப்பட்ட முறையிலும் வருத்தம் தெரிவித்துள்ளது.
கிம் கர்தஷியான் சகோதரிகள் இதனை சாதரனமாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகின்றது, எனவே அவர்கள் வழக்கு பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விளம்பரத்தால் ஃபோர்டு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் JWT விளம்பர நிறுவனத்தின் அதிகாரி மற்றும் ஃபோர்டு தலைமை அதிகாரி ஒருவரை நீக்கியுள்ளதாம்.
இந்த சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் கிடைத்தாலும் அவற்றை பகிர விரும்பவில்லை.
விளம்பரத்திற்க்காக உலகின் பிரபலங்களை பூட்டில் வைக்கும் சாமன்களாக்கியது மிகவும் கண்டனத்துக்குரியதுதானே ?
Exit mobile version