Categories: Car News

ஸ்கோடா ஆக்டிவா விஆர்எஸ் விபரங்கள்

ஸ்கோடா நிறுவனம் ஆக்டிவா விஆர்எஸ் மூன்றாவது தலைமுறை படங்கள் மற்றும் விபரங்களை வெளியிட்டுள்ளது. மிக நேர்த்தியான வடிவமைப்பில் பல விதமான மாற்றங்களுடன் மிக சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தக்கூடிய காராக ஸ்கோடா ஆக்டிவா விஆர்எஸ் வலம் வரும்.
6a9fa skodaoctaviavrs

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் ஆக்டிவா விஆர்எஸ்யில் பொருத்தப்பட்டிருக்கும்.  2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 217பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிடீ டீசல் எஞ்சின் ஆக்டிவா விஆர்எஸ்யில் பொருத்தப்பட்டிருக்கும்.  2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 181பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

இரண்டிலும் 6 வேக முடுக்கி பெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆக்டிவாவை விட 17 % எரிபொருள் சிக்கனத்துடன் புதிய ஆக்டிவா செயல்படும்.

ஸ்போர்ட் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. எலக்ட்ரானிக் எக்‌ஸ்டிஎஸ் டிஃப்ரியண்டல் பயன்படுத்தியுள்ளனர். புதிய கிரீல், முகப்பு விளக்குகள், எல்இடி விளக்குகள் என நவீனமயமாகப்பட்டுள்ளது.

17,18,19 இன்ச் என மூன்று விதமான ஆலாய் வீல்களில் கிடைக்கும். புதிய இன்ஸ்டூருமென்டல் பேனல், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரீங் என அசத்துகின்றது.

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும்.