ஸ்கோடா கார்கள் ஜிஎஸ்டிக்கு பிறகு விலை குறைப்பு..!

இந்தியாவில் ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரிக்கு பிறகு ஆட்டோமொபைல் துறையில் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் ஸ்கோடா நிறுவனம் ரூ. 2.4 லட்சம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது.

ஸ்கோடா கார்கள்

செக் குடியரசை மையமாக கொண்டு செயல்படுகின்ற ஸ்கோடா இந்தியா நிறுவனம் ஜிஎஸ்டி வரி விதிப்பை தொடர்ந்து கார்களின் விலையை குறைத்துள்ளது. குறிப்பாக ஆக்டாவியா மற்றும் சூப்பர்ப் போன்ற மாடல்களின் விலையை குறைத்துள்ளது. ரேபிட் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வரும் ஜூலை 13ந் தேதி களமிறங்க உள்ள 2017 ஸ்கோடா ஆக்டாவியா காரின் விற்பனையில் உள்ள வெளியேறுகின்ற மாடலுக்கும் விலை குறைப்பை ரூ. 1.75 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளது. சூப்பர்ப் காரின் விலையை அதிகபட்சமாக  ரூ.2.40 லட்சம் வரை குறைத்துள்ளது.

ரேபிட் மாடலுக்கு உன்டான விலை குறைப்பு குறித்து அடுத்த சில நாட்களில் வெளியாகலாம். நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் சொகுசு கார் நிறுவனங்கள் வரை தங்களது மாடல்களின் விலையை பெருமளவிற்கு குறைத்துள்ளது.

Exit mobile version