Automobile Tamil

2017 ஹூண்டாய் எக்ஸென்ட் கார் படங்கள் வெளியானது

கூடுதல் வசதிகளை பெற்ற 2017 ஹூண்டாய் எக்ஸென்ட் ரக கார் மாடல் ஏப்ரல் 20-ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சினை பெற்ற மாடலாக வரவுள்ளது.

ஹூண்டாய் எக்ஸென்ட் கார்

எக்ஸென்ட் செடான் ரக காரில் முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மாற்றாக கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்ட புதிய 1.2 லிட்டர் டீசல்  75 hp மற்றும் 171Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் புதிய கிராண்ட் ஐ10 காரில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.

முன்பக்க வடிவ அமைப்பில் புதிய வெர்னா காரின் தாத்பரிங்களை பெற்று அகலமான அறுங்கோன வடிவ கிரில் , படுக்கை நிலையான பனி விளக்கு போன்றவற்றுடன் வந்துள்ள எக்ஸென்ட் காரின் பின்புற வடிவ அமைப்பில் மேம்படுத்தப்பட்ட புதிய பம்பர் அமைப்பு , பூட் மற்றும் டெயில் விளக்கை பெற்றிருப்பதுடன் பக்கவாட்டில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் இடம்பெற்றுள்ளது.

இன்டிரியரில் வேரியன்ட் வாரியாக சில வசதிகளை இழந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ சாட்டிலைட் நேவிகேஷன்  மிரர் லிங்க் உள்பட டேஸ்போர்ட் மற்றும் இருக்கையில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

மாருதி சுஸூகி டிஸையர், ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ போன்ற கார்களுடன் பல முனைப் போட்டியை எக்ஸென்ட் சந்திக்கின்றது.

படங்கள் உதவி – டீம் பிஎச்பி

Exit mobile version