லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் ரூ.3.89 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹூராகேன் காரின் மேற்கூரை இல்லாத மாடலான ஸ்பைடர் காரின் உச்சவேகம் மணிக்கு 324கிமீ ஆகும்.

 

சிவப்பு , கருப்பு மற்றும் பிரவுன் என மூன்று விதமான வண்ணங்களில் ஸ்பைடர் கிடைக்கும். பெரும்பாலான வடிவ தாத்பரியங்களை ஹூரேகேன் சூப்பர் காரில் இருந்தே பெற்றுள்ளது.

610 hp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பபட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 560Nm ஆகும். இதில் 7 வேக DCT கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.  0 முதல் 100கிமீ வேத்தினை 3.4 விநாடிகளில் எட்டிவிடும். லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்  காரின் உச்சவேகம் மணிக்கு 324கிமீ ஆகும்.

50 கிமீ வேகம் வரை மேற்கூறை ஏற அல்லது இறங்கவும் வெறும் 17 நொடிகளை எடுத்துக்கொள்ளும். மேலும் அவசரநேரங்களில் மறைந்திருக்கும் பாதுகாப்பு பார்கள் வாகனத்தினை பாதுகாக்கும்.

4 வீல்களுக்கு ஆற்றலை பெறும் ஹூராகேன் ஸ்பைடர் காரின் மொத்த எடை 1524கிலோ ஆகும். இந்தியாவில் லம்போர்கினி ஹூராகேன்  LP610-4 மற்றும் LP580-2 கூபே மாடல்கள் கிடைக்கின்றது.  ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் விலை ரூ.3.89 கோடி ( மும்பை எக்ஸ்ஷோரூம்)