Site icon Automobile Tamilan

எக்ஸ்யூவி500 W6 வேரியண்டில் ஆட்டோமேட்டிக் அறிமுகம்

பிரசத்தி பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி500 W6 வேரியண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் ரூ. 14.29 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ்யூவி500 காரில் பல கூடுதல் சிறப்பு வசதிகளுடன் கடந்த நவம்பர் 2015யில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 138bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன்  330Nm ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

W6 FWD, W8 FWD ,  W10 FWD மற்றும் W10 AWD என மொத்தம் 4 விதமான வேரியண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் கிடைக்கின்றது.

W6 வேரியண்டில்  இரண்டு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் உடன் இணைந்த இபிடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோ ஹைபிரிட் , இம்மொபைல்சர் , சென்ட்ரல் லாக்கிங் , ஃபாலோ மீ ஹோம் முகப்பு விளக்குகள், பவர் ஸ்டீயரிங் , பவர் விண்டோ , ரீமோட் மூலம் டெயில் கதவினை திறக்க முடியும் மேலும் 6 இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , பூளூடுத் , மழை உணர்ந்து இயங்கும் வைப்பர் , முகப்பில் குரோம் பூச்சு கிரில் , ஆடியோ மற்றும் வாய்ஸ் கட்டுப்பாடு பொத்தான்கள் ஸ்டீயரிங் வீலில் உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் , ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி போன்ற மாடல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது. நாடுமுழுவதும் அனைத்து டீலர்களிடமும் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version