Site icon Automobile Tamilan

செவர்லே க்ரூஸ் விலை குறைந்தது

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வந்த செவர்லே க்ரூஸ் காரின் டாப் வேரியண்ட் விலை ரூ.86,000 வரை குறைக்கப்பட்டுளது. டி பிரிவில் மிக குறைவான விலை கொண்ட மாடலாக க்ரூஸ் விளங்கும்.

ஃபேஸ்லிஃப்ட் செவர்லே க்ரூஸ் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. குறைவான விற்பனே எண்ணிக்கை பதிவு செய்து வரும் க்ரூஸ் காரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை ஜிஎம் முன்னெடுத்துள்ளது.

பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , புதுப்பிக்கப்பட்ட பம்பர் , பனிவிளக்கு அறை போன்ற சில தோற்ற மாற்றங்களுடன் உட்புறத்தில் பிரிமியம் கருப்பு இன்டிரியர் , 7 இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ரியர் வீயூ பார்க்கிங் கேமரா போன்றவற்றுடன் பல வசதிகளை கொண்டுள்ளது.

164 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 380 Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் விற்பனையில் இல்லை.

புதிய செவர்லே க்ரூஸ் விலை பட்டியல்

Chevrolet Cruze LT (MT) ; ரூ. 13.95 லட்சம் ( ரூ. 14.68 லட்சம் பழைய விலை )

Chevrolet Cruze LTZ (MT) ; ரூ. 15.95 லட்சம்  ( ரூ 16.75 லட்சம் பழைய விலை )

Chevrolet Cruze LTZ (AT) ; ரூ 16.95 லட்சம் (ரூ. 17.81 லட்சம் பழைய விலை )

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

எலன்ட்ரா , கரோல்லா , ஆக்டிவா போன்ற கார்களுடன் சந்தையை க்ரூஸ் பகிர்ந்துகொண்டுள்ளது.

Exit mobile version