Site icon Automobile Tamilan

புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் கார் வருகை விபரம்

மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் கார் இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற மாற்றங்களுடன் எஞ்சினில் மாற்றங்கள் இல்லாமல் வரலாம்.

கரோல்லா அல்டிஸ் கார்

ரஷ்யா சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட 2017 கரோல்லா அல்டிஸ்   பல்வேறு விதமான சிறிய மாற்றங்களை பெற்றுள்ளது. குறிப்பாக புதுப்பிக்கப்பட்டு எல்இடி முகப்பு விளக்குடன் இணைந்த எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளை பெற்று விளங்குகின்றது. மேலும் ஒற்றை ஸ்லாட் கொண்ட முன்பக்க க்ரோம் கிரில் , பம்பரின் வடிவம் மற்றும் பனிவிளக்குகள் வட்ட வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இன்டிரியரில் சில கூடுதலான வசதிஎகளுடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவினை பெறவல்ல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகள் உள்பட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும்.

தற்பொழுது விற்பனையில் உள்ள 138 hp பவரை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 87hp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வரலாம்.  கரோல்லா காரின் போட்டியாளர்கள் ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் ஸ்கோடா ஆக்டாவியா போன்ற மாடல்களாகும்.

Exit mobile version