Site icon Automobile Tamilan

மாருதி பெலினோ RS கார் படங்கள் வெளியானது

வருகின்ற மார்ச் 3 , 2017ல் விற்பனைக்கு வரவுள்ள பெலினோ RS காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சாதரன பெலினோ காரை விட கூடுதலான பவரை பெற்ற மாடலாக பெலினோ ஆர்எஸ் விளங்கும்.

மாருதி பெலினோ RS

தோற்ற அமைப்பில் முன்பக்கத்தில் வலைபின்னல் போன்ற அமைப்பினை கொண்ட கருப்பு வண்ண கிரிலுடன் பின்பக்க பம்பரில் சிறிய மாற்றங்களுடன் கருப்பு வண்ண அலாய் வீல் போன்றவை பெற்றுள்ளது.

பவர்ஃபுல்லான பலேனோ RS 101 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 நியூட்டன்மீட்டர் ஆகும்.  பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். பலேனோ ஆர்எஸ் ஒற்றை ஆல்ஃபா டாப் வேரியன்டில் மட்டுமே கிடைக்க உள்ளது.

பெலினோ ஆர்எஸ் முக்கிய வசதிகள்

போட்டியாளர்களாக ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி மற்றும் ஃபியட் அபாரத் புன்ட்டோ போன்ற பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.

Exit mobile version