மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் 2014

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் 2014 அறிமுகம் செய்துள்ளனர். புதிய எஸ் கிளாஸ் நவீன நுட்பங்களுடனும் பலரதரப்பட்ட வசதிகளுடனும் வெளிவந்துள்ளது. மெர்சிடிஸ் ஸ் கிளாஸ் செடான் மிக நேர்த்தியான வடிவமைப்பில் விளங்குகின்றது. எஸ் கிளாஸ் காரின் அதிகார்வப்பூர்வ படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முந்தைய எஸ் கிளாஸ் காரைவிட பன்மடங்கு உயர்வு பெற்றுள்ளது. எஸ் கிளாஸ் 2007 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது. புதிய எஸ் கிளாஸ் செடான் காரில் 4 விதமான வேரியண்ட் உள்ளன. அவை
1. எஸ்350 ப்ளூடெக்கில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 258எச்பி மற்றும் டார்க் 620என்எம் ஆகும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். 0-100கிமீ வேகத்தினை 6.8 விநாடிகளில் எட்டிவிடும் இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.
2. எஸ்300 ப்ளூடெக்  ஹைபிரிட்டில் 2.1 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 240எச்பி மற்றும் டார்க் 500என்எம் ஆகும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.  0-100கிமீ வேகத்தினை 7.8 விநாடிகளில் எட்டிவிடும் இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 238 கிமீ ஆகும்.
3. எஸ்500 வகையில் 4.7 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 555எச்பி மற்றும் டார்க் 700என்எம் ஆகும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். 0-100கிமீ வேகத்தினை 4.8 விநாடிகளில் எட்டிவிடும் இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.
4. எஸ்400 வேரியண்ட்டில் 3.5 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 306எச்பி மற்றும் டார்க் 370என்எம் ஆகும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். 0-100கிமீ வேகத்தினை 6.8 விநாடிகளில் எட்டிவிடும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.
ஏரோடைனமக்ஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்கிளாஸ் டிராக் கோஎஃபிசன்ட் 0.24 மட்டுமே. இது மெர்சிடிஸ் சிஎல்ஏ சிறிய செடான் அளவிற்க்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் டிராக் கோஎஃபிசன்ட் 0.23 ஆகும்.
எஸ் கிளாஸ் ஸ்டான்டர்டு அளவுகள் நீளம் 5116மிமீ, அகலம் 1899மிமீ,  உயரம் 1483மிமீ மற்றும் வீல்பேஸ் 3035மிமீ ஆகும். மேலும் லாங் வீல் பேஸ் வேரியண்ட் அளவுகள் நீளம் 5246மிமீ, அகலம் 1899மிமீ,  உயரம் 1483மிமீ மற்றும் வீல்பேஸ் 3165மிமீ ஆகும்.
எஸ் கிளாஸ் காரில் முந்தைய காரைவிட மிக அதிக அளவில் குறைவான எடையுள்ள பொருட்களை பயன்படுத்தியுள்ளனர்.பல்வேறு விதமான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளுடன் வெளிவந்துள்ளது.
முகப்பில் பாரம்பரிநமான முகப்பு கிரில், மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ், எல்இடி விளக்குகள், இருக்கைகளின் சொகுசு தன்மைகள் அதிகரிக்கப்பட்டுள
்ளன. 12.3 இன்ச் அகலமுள்ள இன்ஃபோமென்ட் டிஸ்பிளே பயன்படுத்தியுள்ளனர்.
புதிய எஸ் கிளாஸ் காரில் உள்ள பாதுகாப்பு வசதிகள் காற்றுப்பைகள், டிஸ்ட்ரானிக் ப்ளஸ், ஸ்டீயரீங் அசிஸ்ட், அட்டென்சன் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், டிராஃபிக் அசிஸ்ட், ஹைபிம் அசிஸ்ட் ப்ளஸ், நைட் வியூ அசிஸ்ட் மற்றும் ஆக்டிவ் கிப் லேன்.