ஹூண்டாய் எஸ்யூவி விரைவில்

ஹூண்டாய் மோட்டார்ஸ் புதிய எம்பிவி, எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் காரினை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பினை பெற்று வரும்  எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களை ஹூண்டாய் நிறுவனமும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இந்தியாவில் மிகுந்த வரவேற்பினை பெற்று வரும் ரெனால்ட் டஸ்ட்டர், வரவிருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்களுக்கு போட்டினை கொடுக்கும் வகையில் இந்த கார்கள் வெளிவரவுள்ளது. மேலும் ஐ10 மற்றும் ஐ 20 கார்களை அடிப்படையாக கொண்டு ஹேட்ச்பேக் கார் வெளிவரும். இந்த ஹேட்ச்பேக் காரின் பெயர் ஐ15 யாக இருக்கலாம்.

i10
Exit mobile version