Automobile Tamilan

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ. 18.99 லட்சம் தொடக்க விலையில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. டூஸான் எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்சின் ஆப்ஷனுடன் ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்சில் கிடைக்க உள்ளது.

hyundai-tucson

 

சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் ரக கார்களின் ஆதிக்கம் இந்திய சந்தையிலும் கடந்த ஒரு சில வருடங்களாகவே கவனிக்கதக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றது. எனவே போட்டியார்களை ஈடுகட்டும் நோக்கில் மகிழுந்து தயாரிப்பாளர்கள் எஸ்யூவி ரக மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில் ஹூண்டாய் க்ரீட்டா வெற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள டூஸான் எஸ்யூவி பற்றி அறிந்துகொள்ளலாம்.

டூஸான் என்ஜின்

பிரபலமான க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ மாடல்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 153 பிஹெச்பி ஆற்றல், 192 என்எம் டார்க் வெளிப்படுத்தும். ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.   ஹூண்டாய் டூஸான் காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலின்மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.03 கிமீ , ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 12.95 கிமீ மைலேஜ் ஆகும்.

ஹூண்டாய் டூஸான் டீசல் காரில் அதிகபட்சமாக 182 பிஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 400 என்எம் ஆகும. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஹூண்டாய் டூஸான் காரின் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 18.42 கிமீ ,  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 16.38 கிமீ ஆகும்.

 

டூஸான் சிறப்பு வசதிகள்

வெளிவந்துள்ள டூஸான் எஸ்யூவி காரில் 2WD M/T, 2WD A/T GL மற்றும் 2WD A/T GLS (டீசல் மட்டும்) என மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் வெளியாகியுள்ள இந்த காரில் பல வசதிகள் அனைத்து வேரியன்டிலும் இடம்பெற்றுள்ளது.

தானியங்கி முகப்பு விளக்கில் வந்துள்ள புராஜெக்டர் விளக்கு , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்கு , க்ரூஸ் கட்டுப்பாடு , 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன் , குரல்வழி செயல்பாடு ,ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆதரவினை பெறவல்லதாகும்.

டாப் வேரியன்டில் 10 வகையான தேர்வுகளை கொண்ட ஓட்டுனர் இருக்கை , எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் , கைகளின் உதவியில்லாமல் செயல்படும் டெயில்கேட் கதவுகள் என பலவற்றை பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை காற்றுப்பை மற்றும் பக்கவாட்டு , கர்டெயின் காற்றுப்பைகள் இடம்பெற்றுள்ளது.

டூஸான் எஸ்யூவி காருக்கு நேரடியான போட்டியாளராக ஹோண்டா சிஆர்வி விளங்குகின்றது. பிரிமியம் எஸ்யூவிகளான எண்டேவர் , ட்ரெயில்பிளேசர் விலையும் சரி நிகராகவே உள்ள நிலையில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி500 காரின் டாப் வேரியண்ட் விலையை விட சற்று கூடுதலாகவே டூஸான் பேஸ் வேரியன்ட் விலை அமைந்துள்ளது. ஆனால் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் டூஸான் காரில் இடம்பெறவில்லை.

 

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி விலை பட்டியல்

ஹூண்டாய் டூஸான் பெட்ரோல்

ஹூண்டாய் டூஸான் டீசல்

Exit mobile version