Site icon Automobile Tamil

2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு

மாருதி நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எர்டிகா கார்களை வரும் நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த காருக்கான புக்கிங்கை சில டீலர்கள் தொடங்கி விட்டனர். இந்தியாவை அடிப்படையாக கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் புதிய எர்டிகா எம்பிவி கார்களை தயாரிப்பு பணிகளை தொடங்கி விட்டது.

இந்த காரின் உள்புறத்தில், புதிய ஸ்டைல்களுடன் சிலிக் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறமாக பெண்டர்கள் மற்றும் முன்புற கிரில்கள் பொருத்தப்பட்டுள்ளது. காரின் பின்புறத்தில் பூமராங் போன்ற வடிவில் LED டைல்லேம்கள் பொருத்தப்பட்டுள்ளது

ஏற்கனவே தெரிவித்தபடி காரின் ஹார்ட்டெக் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிலாச்சர்களுடன் பெரியளவிலான MID பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை, டூயல் பிராண்ட் ஏர்பேக்ஸ் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் ஆட்டோமேடிக் கிளைமேடிக் கண்ட்ரோல் சிஸ்டம்களுடன் ரிவர் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் புதிய 1.5 லிட்டர் K15B நான்கு சிலிண்டர் SHVS இன்ஜின்களுடன் 104bhp ஆற்றலுடன் 138Nm டார்க்யூ உடன் இயங்கும். டீசல் வகை கார்கள் 1.3 லிட்டர் யூனிட் உடன் 89bhp ஆற்றல் மற்றும் 200Nm டார்க்யூவில் இயங்கும்.

இந்த காரிகளில் விலை 6.4 லட்சம் முதல் 10.8 லட்சம் வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது ( எக்ஸ் ஷோரூம் விலை)

Exit mobile version