Site icon Automobile Tamilan

2018 ஹூண்டாய் சாண்ட்ரோ ஆன்லைன் புக்கிங் இன்று முதல் தொடங்கியது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நேற்று தனது AH2 என்ற கோட் கொண்ட சாண்டிரோ கார்களுக்கு ஹாட்ச்பேக் சாண்ட்ரோ என்று பெயரிட்டது. தொடர்ந்து இந்த கார்கள் வரும் 23ம் தேதி அறிமுகமாகும் என்றும், புதிய சாண்ட்ரோ கார்கள் 4 லட்ச ரூபாய் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாண்ட்ரோ கார்களுக்கான ஆன்லைன் புக்கிங் இன்று முதல் தொடங்க உள்ளது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுக சலுகையாக புக்கிங் கட்டணமாக வாடிக்கையாளர்கள் முதலில் செலுத்தும் 50,000 ரூபாய்க்கு பதிலாக 11 ஆயிரத்து 100 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

AMT தொழில்நுட்பத்துடன், வெளிவர உள்ள புதிய மாடல் கார்கள் 4 சிலிண்டர், 1.1 பெட்ரோல் இன்ஜின்களுடன் குறைந்த வைப்ப்ரேசன்களை கொண்டிருக்கும். இதுமட்டுமின்றி தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட CNC பிட்டிங் ஆப்சனும் இதில் உள்ளது

இந்த காரின் அறிமுகம் செய்து பேசிய ஹூண்டாய் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ யக் கூ, புதிய சாண்ட்ரோ கார்கள், மார்டன் ஸடைலிஸ் டால்பாய் டிசைன், வசதியான மற்றும் ஆடம்பரமான கேபின், புதிய தலைமுறை தொழில்நுட்ப வசதிகள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்ட டிசைன், அதிக ஆற்றல் மற்றும் அமைதியாக பயணத்தால் வாடிக்கையாளர்களுக்கு மன அமைதி ஏற்படுத்துவது போன்ற
ஆறு முக்கிய பில்லர்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய மாடல் கார்களுக்கு மூன்று ஆண்டுகள்/ 1 லட்சம் கிலோ மீட்டர் வாரண்ட்டி மற்றும் 3 ஆண்டு ரோட் சைட் அசிஸ்டெண்ட்ஸ்களுடன் குறைந்த செலவு கொண்ட பராமரிப்பு மற்றும் வீட்டு வாசலுக்குகே வந்து வழங்கும் சேவை போன்றவைகளையும் கொண்டுள்ளது.

Exit mobile version